உங்க ஸ்மார்ட்போன்ல கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிரோட இருக்கும் தெரியுமா...?

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 31 மார்ச் 2020 13:09 IST
ஹைலைட்ஸ்
  • கொரோனா வைரஸ் 96 மணி நேரம் கண்ணாடி மீது வாழ முடியும்
  • இது பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் மீது 72 மணி நேரம் வரை வாழும்
  • தொற்றுநோயைத் தவிர்க்க ஸ்மார்ட்போன்களை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்

2003-ஆம் ஆண்டு WHO ஆய்வின்படி, SARS-CoV வைரஸ் ஒரு கண்ணாடி மேற்பரப்பில் 96 மணி நேரம் இருக்க முடியும்.

நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவிவரும் நிலையில், நாம் தினமும் பயன்படுத்தும் ஸ்மாட்போனில் கொரோனா வைரஸ் வந்தால் என்ன செய்வது? அப்படி வைரஸ் தொற்றிக்கொண்டால், அவை எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்? என்ற அச்சம் அனைவரிடத்திலும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்றை தவிர்க்க ஸ்மார்ட்போனை எப்படி சுத்தம் செய்வது? எப்படி கையால்வது என்பது போன்ற பல குழப்பங்களுக்குமான தீர்வு இதோ உங்களுக்காக! 

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வில், SARS- CoV வைரஸைப் போலவே, coronavirus (SARS-CoV-2) ஸ்டீல் மற்றும் கடினமான பிளாஸ்டிக் போன்ற மேற்பரப்புகளில் சுமார் 72 மணி நேரம் (மூன்று நாட்கள்) வாழும் என்று கண்டறிந்துள்ளது. கொரோனா வைரஸ், அட்டை மேற்பரப்பில் சுமார் 24 மணிநேரமும், தாமிரத்தில் சுமார் 4 மணி நேரமும் வாழும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் முன்புறத்தில் கண்ணாடி பேனலுடன் வருவதால், கொரோனா வைரஸ் ஒரு ஸ்மார்ட்போனில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) வரை கண்ணாடி மீது இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் NIH ஆய்வில் கூறப்பட்டுள்ளது. , ஸ்மார்ட்போன்கள் தவிர, கண்ணாடி மேற்பரப்பு கொண்ட, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், டேப்லெட் / மடிக்கணினி போன்ற அனைத்து கேஜெட்டிற்கும் வரலாம்.

நாம், அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். உங்கள் ஸ்மார்ட்போனை, ஈரமான மைக்ரோஃபைபர் துணியால் மேற்பரப்பைத் துடைக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் உள்ள ஓலியோபோபிக் கோட்டிங் இவற்றை அழிக்கக்கூடும் என்பதால், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான கிருமிநாசினி திரவங்களைப் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் screen protector-ஐ இன்ஸ்டல் செய்யலாம், அதற்கு பதிலாக இதை சுத்தம் செய்யலாம், இதனால் டிஸ்பிளே கோட்டிங் சேதமடையாது.

ஐபோன் சாதனத்தை, "70 சதவிகித ஐசோபிரைல் ஆல்கஹால் துடைப்பான் / க்ளோராக்ஸ் கிருமிநாசினி துடைப்பான்களைப் பயன்படுத்தி, காட்சி, விசைப்பலகை / பிற வெளிப்புற மேற்பரப்புகள் போன்வற்றை துடைக்கலாம். ப்ளீச் பயன்படுத்த வேண்டாம். போனை திறக்கும் போது, ஈரப்பதம் ஆவதை தவிர்க்கவும். ஆப்பிள் தயாரிப்பை சுத்தம் செய்ய எந்த முகவர்களிடமும் கொடுக்காதீர்கள். துணி அல்லது தோல் மேற்பரப்பை பயன்படுத்த வேண்டாம்" என்று ஆப்பிள் கூறுகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனை எப்படி சுத்தம் செய்வது? கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்:

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Smartphones, Coronavirus, COVID 19
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.