தாய்வானில் வெளியான நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 3 ஏப்ரல் 2019 11:23 IST
ஹைலைட்ஸ்
  • ஹோல்-பஞ்ச் செல்ஃபி கேமராவுடன் இந்த நோக்கியா தயாரிப்பு வெளியாகிறது.
  • இந்த போனில் மூன்று பின்புற கேமரா மற்றும் 3,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
  • தாய்வினில் இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30 முதல் விற்பனைக்கு வெளியாகிறது.

நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனுடன் நேற்று நோக்கியா X71 ஸ்மார்ட்போனையும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தாய்வானில் அறிமுகம் செய்தது. ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் வெளியாகும் முதல் ஹோல்-பஞ்ச் செல்ஃபி கேமரா இதுவாகவே இருக்கும். 48 மெகா-பிக்சல் பின்புற கேமரா, பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஸ்னாப்டிராகன் 660 SoC மற்றும் 3,500mAh பேட்டரி வசதி போன்ற பல முன்னணி அமைப்புகளுடன் இந்த தயாரிப்பு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா X71 விலை மற்றும் வெளியாகும் தேதி:

தாய்வானில் அறிமுகமாகியுள்ள இந்த நோக்கியா X71 ஸ்மார்ட்போன், ரூ.26,600 மதிப்புடையது. எக்லிப்ஸ் பிளாக் நிறத்தில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 30 முதல் விற்பனைக்கு வரும். நோக்கியாவின் இந்த புதிய தயாரிப்பு, உலக சந்தைகளில் வெளியாகும் தேதி பற்றிய தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

நோக்கியா X71 அமைப்புகள்:

இந்த நோக்கியா X71 ஸ்மார்ட்போன் இரண்டு சிம்-கார்டு வசதியுடன் ஆண்ட்ராய்டு மென்பொருளால் இயங்குகிறது. 6.39 இஞ்ச் ஹெச்டி திரை, ஸ்னாப்டிராகன் 660 SoC கொண்டு இயங்கும் இந்த தயாரிப்பு 6ஜிபி ரேமுடன் வெளியாகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128ஜிபி இன்-பில்ட் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது கூடுதல் தகவல். 

நோக்கியாவின் இந்த புதிய தயாரிப்பு 2.5D டபுள்-சைட் கிளாஸ் வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் மூன்று பின்புற கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. போனின் முன்புற விளிம்பில் செல்ஃபி கேமரா அமைந்துள்ளது. இந்த போனில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் வலது புறித்தில் அமைந்துள்ளன.

பின்புறத்தில் உள்ள கேமரா வசதியைப் பொறுத்தவரை 48/5/8 மெகா பிக்சல் சென்சார்கள் இடம் பெற்றுள்ளன. அதுபோல் இந்த தயாரிப்பில் 16 மெகா பிக்சல் முன்புற செல்ஃபி கேமராவும் இடம் பெற்றுள்ளது. இந்த நோக்கியா X71 ஸ்மார்ட்போன் 3,500mAh பேட்டரி மற்றும் 18W வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை கொண்டுள்ளது. மேலும் 180 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் டைப்-சி வகை சார்ஜிங் ஸ்லாட்டை கொண்டுள்ளது.

 
KEY SPECS
Display 6.39-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android Pie
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia X71, Nokia X71 Price, Nokia X71 Specifications, Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விவோ X300 அல்ட்ரா மற்றும் ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா விலை: ஷாவோமி 17 அல்ட்ராவை விட விலை அதிகமாக இருக்கலாம்
  2. ஆண்ட்ராய்டின் 24 மணிநேரக் காத்திருப்பினைத் தவிர்த்து, மூன்றாம் தரப்பு செயலிகளை (Third-Party Apps) நிறுவுவது எப்படி?
  3. 9,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் கேமராவுடன் போக்கோ X8 புரோ தொடர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை மற்றும் சலுகைகளை இங்கே காணலாம்
  4. ஒன்பிளஸ் 15T: அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  5. இந்த ஆண்டின் இறுதியில் கேலக்ஸி S26 சீரிஸில் ஏர் டிராப் (AirDrop) வசதியை அறிமுகம் செய்ய சாம்சங் திட்டம்
  6. விவோ Y21 5G மற்றும் விவோ Y11 5G: சர்வதேச அறிமுகத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய விலை மற்றும் நிறங்கள் குறித்த தகவல்
  7. அலெக்சா மற்றும் AI அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அமேசான் உருவாக்கி வருகிறது
  8. Mad For Each Other இப்போது ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் ஆகிறது: தளம், நடிகர்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள்
  9. கேலக்ஸி S26 சீரிஸ் அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ராவின் விலை குறைந்துள்ளது
  10. ரியல்மி 16 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.