'ஆண்டிராய்ட் 9 பை' வசதியுடன் வெளியாகும் முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 23 பிப்ரவரி 2019 20:41 IST
ஹைலைட்ஸ்
  • ஆண்டிராய்ட் 9 பைய் வெளியாகும் முதல் பட்ஜட் ஸ்மார்ட்போன் நோக்கியா 2.1
  • 5.5 இஞ்ச் ஹெச்டி திரை!
  • இந்த அப்டேட் தற்போது பயன்பாட்டிற்கு வெளியாகியுள்ளது!

ஆண்டிராய்ட் ஓரியோ உடன் நோக்கியா 2.1 அறிமுகமானது.

ஆண்டிராய்டு 9 பை அப்டேட் பல முன்னணி போன்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில், முதன்முறையாக நோக்கியா 2.1 பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு இந்த ஆண்டிராய்டு அப்டேட் கிடைத்துள்ளது. ஹெச்எம்டி குளோபல் (நோக்கியா) நிறுவனத்தின் தலைமைத் தயாரிப்பு நிர்வாகி ட்விட்டரில் இது குறித்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் நோக்கியா 2.1 அறிமுகம் செய்யப்படட்ட நிலையில், ஓரே வருடத்தில் இந்த புதிய ஆண்டிராய்ட் அப்டேன் கிடைக்க உள்ளது. ரூபாய் 5,649-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த போனில்  அப்டேட் சென்று சேர்வதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். 500 எம்பி டேட்டா இந்த அப்டேட்டை பதிவிறக்கும் செய்யத் தேவைப்படும்.

நோக்கியா 2.1 அமைப்புகள்:

5.5 இஞ்ச் ஹெச்டி திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 425 SoC பிராசஸ்சரை கொண்டுள்ளது. 1 ஜிபி ரேம் மட்டுமே இந்த போனில் உள்ள நிலையில் பேட்டரி வசதி 4000mAh ஆக உள்ளது. கேமரா வசதிகளைப் பொறுத்தவரை 8 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் சென்சார் இந்த கேமராவில் உள்ளன. அதுபோல செல்ஃபிகளுக்காக பிரத்தியேகமாக 5 மெகா பிக்சல் கேமரா சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது. 3.5 mm ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற பல இதர வசதிகளும் இந்த போனில் உள்ளது.

ஹெச்எம்டி டிராகன்ஸ் பொறுத்தவரை தனது ஆண்டிராய்ட் 9 பை அப்டேட்டை நோக்கியா 8, நோக்கியா 6 (2017), நோக்கியா5, நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 5.1 ப்ளஸ், நோக்கியா 7.1, நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 7 ப்ளஸ் ஆகிய போன்களுக்கும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

         

                                            

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , HMD Global, Android 9 Pie, Android Pie, Android Pie Go Edition, Android Go

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் கேலக்ஸி போனில் புதிய நெட்வொர்க் ஸ்பீட் இண்டிகேட்டர் அம்சத்தை இயக்குவதற்கான படிப்படியான வழிகாட்டி
  2. வாட்ஸ்அப் விரைவில் கூடுதல் அம்சங்களுடன் மெட்டா ஒன் பிளஸ், மெட்டா ஒன் பிரீமியம் சந்தாக்களை வழங்கக்கூடும்
  3. சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் விலை இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்தது: விவரக்குறிப்புகள், அம்சங்கள்
  4. போவா 8 விமர்சனம்: தைரியமான வடிவமைப்பு, பெரிய லட்சியங்கள்
  5. வாட்ஸ்அப்பின் ‘செடியூல்டு மெசேஜஸ்’ அம்சம் வெளியீட்டிற்கு முன்பே கசிந்தது, பல பயனுள்ள திறன்களை வழங்கக்கூடும்
  6. ஃபிஃபா உலகக் கோப்பைக்காக மெட்டா செயலிகளில் புதிய கால்பந்து அம்சங்கள் அறிமுகம்
  7. ஒப்போ ரெனோ 16 சீரிஸ் விலை, ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகள் ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர் பட்டியல் மூலம் கசிந்தது
  8. ரியல்மி நார்சோ டேஸ் விற்பனை: நார்சோ 100 லைட் 5G உட்பட பல போன்களுக்கு அதிரடி தள்ளுபடி
  9. ஒன்பிளஸ் N6 போனின் நிறங்கள் மற்றும் வடிவமைப்புடன் அதன் இந்திய அறிமுகத்தை டீஸ் செய்தது நிறுவனம்
  10. 8000mAh பேட்டரி, புதிய அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளேயுடன் டெக்னோ போவா 8 இந்தியாவில் அறிமுகம்: விலை விவரங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.