நவம்பர் 14-ல் வெளிவருகிறது Mi Note 10!

நவம்பர் 14-ல் வெளிவருகிறது Mi Note 10!

Photo Credit: Weibo/ Xiaomi

Mi CC9 Pro இரண்டு நிறங்களில் வெளிவருகிறது

ஹைலைட்ஸ்
  • Mi Note 10, நவம்பர் 14-ஆம் தேதி போலந்தில் அறிமுகப்படுத்தப்படும்
  • Mi CC9 Pro நவம்பர் 5-ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது
  • இரண்டு போன்களும் Android 9-ல் இயங்குவதை Geekbench குறிக்கிறது
விளம்பரம்

Mi Note 10 நவம்பர் 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம். ஜியோமி போலந்து (Xiaomi Poland) தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட டீஸர் சுட்டிக்காட்டியுள்ளது. கூடுதலாக, நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போ பக்கத்தில் ஒரு டீஸரைப் பகிர்ந்துள்ளது. Mi CC9 Pro-வில் 5,260mAh பேட்டரி இருப்பதை வெளிப்படுத்தியுள்ளதோடு, Mi Note 10 உலகளாவிய பதிப்பு என்று நம்பப்படுகிறது. Mi CC9 Pro நவம்பர் 5 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது. இருப்பினும் ஜியோமி இன்னும் Mi Note 10 வெளியீட்டு தேதியை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தனித்தனியாக, Mi Note 10 மற்றும் Mi CC9 Pro இரண்டும் Geekbench காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சில விவரக்குறிப்புகளைக் குறிக்கிறது.

அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் அட்டைப் புகைப்படத்தில், நவம்பர் 14 அறிமுகமாக உள்ள புதிய ஸ்மார்ட்போனை ஜியோமி போலந்து கிண்டல் செய்தது. இந்த புகைப்படத்தின் கிராபிக்ஸ், Mi Note 10 வெளியீட்டில் தெளிவாகக் குறிக்கிறது. இருப்பினும், போலந்து வெளியீடு Mi Note 10-ன் உலகளாவிய வெளியீடாக செயல்படுமா அல்லது நிறுவனம், ஸ்மார்ட்போனை போலந்தில் வெளியிடுவதற்கு முன்பு மற்றொரு நகரத்தில் அறிமுகப்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதிகாரப்பூர்வ ஜியோமி ட்விட்டர் கணக்கு வரும் நாட்களில் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறோம். 

குறிப்பிட்டுள்ளபடி, ஜியோமி, வெய்போவில் ஒரு டீஸரை வெளியிட்டுள்ளது. இது 30W fast சார்ஜிங் ஆதரவுடன் 5,260mAh பேட்டரி இருப்பதை வெளிப்படுத்துகிறது. ஜியோமி நிர்வாகியின் மற்றொரு டீஸர், தொலைபேசி இரண்டு நிறங்களில் வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது. அதன் பெயர்கள் Ice Snow Aurora மற்றும் Magic Green என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

mi cc9 pro battery weibo Mi CC9 Pro

Mi CC9 Pro, 30W fast சார்ஜிங்கை ஆதரிக்கிறது
Photo Credit: Weibo/ Xiaomi

தனித்தனியாக, Mi CC9 Pro மற்றும் Mi Note 10 ஆகியவை Geekbench-l மிகவும் இணையான விவரங்கள் மற்றும் மதிப்பெண்களுடன் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், Mi Note 10, Mi CC9 Pro-வின் சர்வதேச மாறுபாடாக இருக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. Geekbench பட்டியல்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 9 இருப்பதைக் காட்டுகின்றன. மேலும், Geekbench-ல் பயன்படுத்தி சோதிக்கப்பட்ட Mi Note 10 மாடலில் 6 ஜிபி ரேம் இருப்பதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் Geekbench-ல் பட்டியலிடப்பட்டுள்ள Mi CC9 Pro மாடலில் 8 ஜிபி ரேம் உள்ளது. இரண்டு தொலைபேசிகளும் இரண்டு ரேம் வேரியண்டில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் மற்ற வகைகளும் இருக்கலாம். 

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Mi CC9 Pro,TENAA பட்டியலின்படி, இந்த தொலைபேசி 12 ஜிபி ரேம், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, 256 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரெஜ் மற்றும் 6.47-inch full-HD + (1080x2340 pixels) டிஸ்ப்ளேவை பேக் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »