ஷாவ்மி, சர்வதேச சந்தைகளுக்கு Mi 10 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் மார்ச் 10 அன்று Mi 10 மற்றும் Mi 10 Pro ஃபிளாக்ஷிப் போன்களை உலகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். Mi 9 சீரிஸுடன் ஒப்பிடும்போது செங்குத்தான விலை உயர்வு இருந்தபோதிலும், Mi 10 சீரிஸ் குறிப்பாகச் சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. Mi 10 சீரிஸ் முதல் முறையாக, ஷாவ்மி, கேமரா வன்பொருளுடன் வெளியேறியதைக் குறிக்கிறது. Mi 10 Pro இப்போது ஸ்மார்ட்போன் புகைப்படம் எடுப்பதற்கான DxOMark-ன் கேமரா தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
Enough waiting!
— Xiaomi (@Xiaomi) March 6, 2020
See you on March 27th!
Make sure you tune in to get all the details.#Mi10 #LightsCameraAction pic.twitter.com/8nNJ4Alyth
ட்விட்டரில் அதிகாரப்பூர்வ Xiaomi பக்கம், மார்ச் 27-ஆம் தேதி Mi 10 சீரிஸ் உலகளவில் அறிமுகமாகும் என்று அறிவித்துள்ளது. வெளியீட்டு நிகழ்வு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Twitter, YouTube மற்றும் Facebook கணக்குகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் பிற்பகல் 2 மணிக்கு GMT (இரவு 07:30 மணி IST)-க்கு தொடங்கும். Mi 10 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஷாவ்மி, கேஜெட்ஸ் 360-க்கு தனது தயாரிப்பு யுக்தியை மாற்றியமைத்து வருவதாகவும், விரைவில் இந்தியாவில் Mi பிராண்டின் கீழ் உயர்நிலை போன்களை அறிமுகம் செய்யப்போவதாகவும் கூறியது. ரெட்மி துணை பிராண்ட் மற்றும் போக்கோ தொடர்ந்து இணைந்திருக்கும் மற்றும் பட்ஜெட் பிரிவை குறிவைக்கும், அதே நேரத்தில் Mi சீரிஸ் விலை அதிகரிக்கும்.
Mi 10 டூயலின் சர்வதேச விலை நிர்ணயம் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் சீனாவில் அவற்றின் விலை நிர்ணயம் எங்களுக்கு ஒரு யோசனையைத் தரக்கூடும். சீனாவில் Mi 10-ன் அடிப்படை 8GB + 128GB வேரியண்டின் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ..40,000)-ல் தொடங்குகிறது மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை CNY 4,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,000) வரை செல்கிறது. Mi 10 Pro-வைப் பொறுத்தவரை, அடிப்படை 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 4,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50,000)-ல் தொடங்குகிறது. அதே சமயம் 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்டின் விலை CNY 5,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ .60,000)-யாக உள்ளது.
Mi 10 சீரிஸ் போன்களில், 90Hz புதுப்பிப்பு விகிதத்துடன் 6.67 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) வளைந்த அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் அவை குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகின்றன. இரண்டு போன்களிலும் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இது 108 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. Mi 10-ல் 4,780 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 30W வயர்டு சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Mi 10 Pro-வைப் பொறுத்தவரை, இது 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்