எம்ஐ 10 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை Xiaomi வெளியிட்டுள்ளது. இது நிறுவனத்தின் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாகும். புதிய மாடல் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்பிளே நாட்சுடன் வருகிறது. இந்த போன் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது.
Mi 10 Lite 5G-யின் விலை யூரோ 349 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,200)-யாக உள்ளது. ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தைகளில் மே மாத தொடக்கத்தில் நான்கு தனித்துவமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எம்ஐ 10 லைட் 5ஜி, 6.57 இன்ச் AMOLED TrueColor டிஸ்பிளேவை வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்சுடன் கொண்டுள்ளது. இந்த போனில், ஆக்டா கோர் Qualcomm Snapdragon 765G SoC உள்ளது. இது LPDDR4X ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் திறன் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. ஸ்மார்ட்போன் நைட் மோட் 2.0, ஏஐ டைனமிக் ஸ்கைஸ்கேப்பிங் மற்றும் வ்லோக் மோட் போன்ற அம்சங்களும் உள்ளன.
எம்ஐ 10 லைட் 5ஜியில், 20W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் 4,160mAh பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவு சார்ஜ் 3.5-ஐ ஆதரிக்கிறது. தவிர, இது டிஸ்பிளே கைரேகை சென்சாருடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்