இந்தியாவில் வெளியாகிறது 5 கேமராக்கள் கொண்ட’எல்ஜி வி40 தின்க்யூ’! - விலை விவரம்..!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 25 ஜனவரி 2019 17:15 IST
ஹைலைட்ஸ்
  • 'எல்ஜி வி40 தின்க்யூ' ஸ்மார்ட்போனானது அக்டோபரில் அறிமுகமானது.
  • பின்பக்கம் 3 கேமராக்கள் கொண்ட போனாக எல்ஜி வி40 தின்-க்யூ வெளியாகிறது.
  • எல்ஜி வி40 தின்-க்யூ போனானது 2 செல்பி கேமரா கொண்டுள்ளது.

அமேசான் வலைதளத்தில் எல்ஜி வி40 தின்க்யூ போன் ரூ.49,990க்கு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

தென்கொரிய நிறுவனமான எல்ஜி தனது புதிய ஸ்மார்ட்போனான எல்ஜி வி40 தின்க்யூ மாடலை கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. எல்ஜி வி30-யின் வெற்றியை தொடர்ந்து, முதன் முதலாக 5 கேமராக்கள் கொண்ட போனாக, அதாவது முன்பக்கம் 2 கேமராவும், பின்பக்கம் 3 கேமராவும் கொண்டதாக இந்த போனை எல்ஜி அறிமுகப்படுத்தியது.  
 

வி40 தின்-க்யூ-வின் மற்ற சிறப்பம்சம்சங்கள் என்னவென்றால், ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஐபி68 கொண்டுள்ளது. மேலும் மிலிட்டரி கிரேட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் 19.5:9 ஓஎல்இடி நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது, பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்ஸ், 32-பிட் ஹைஃபை குவாட்-டியேசி ஆடியோ மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் 3டி சரௌண்ட் சவுண்ட் கொண்டு ஆடியோவில் அதிக கவனம் கொண்டுள்ளது.
 

எல்ஜி வி40 தின்-க்யூ-வின் விலை மற்றும் அறிமுக தேதி,
 

எல்ஜி வி40 தின்-க்யூ-வின் விலையானது ரூ.60,000ல் இருந்து தொடங்குகிறது. மொபைல் மாடல்களை பொருத்து விலை மாறும். இந்த போன்,மோராக்கன் ப்ளு, பிளாட்டினம் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் இந்த போன் 49,990க்கு கிடைக்கிறது. 
 

அமேசான் கிரேட் இந்தியன் சேலில் பிரைம் வாடிக்கையாளர்கள் இன்றே இந்த எல்ஜி வி40 தின்க்யூ போனை எச்டிஎப்சி கார்டு பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 10 சதவீத தள்ளுபடி விலையில் பெறலாம். இதேபோல், பஜாஜ் பைனான்ஸ் மூலம் வாங்கும் போது, இ.எம்.ஐ கிடையாது. இது போக, ரூ.1000 அமேசான் பே கேஷ்பேக் சலுகைகளும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. பிரைம் வாடிக்கையாளர்கள் இல்லாதவர்கள் நாளை முதல் இந்த போனை பெறலாம்.

 

 

எல்ஜி வி40 தின்க்யூ-வின் சிறப்பம்சங்கள்
  

எல்ஜி வி40 தின்க்யூ ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. 6.4 இன்ச் (1440x3120) ஓஎல்இடியுடன், 19.5:9 கார்ணரிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புகளுடன் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 6ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்நெல் மெமரி கொண்டுள்ளது. மேலும் 2 டிபி வரை மைக்ரோ மெமரி கார்டு கொண்டு நினைவகத்தை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement


எல்ஜி வி40 தின்க்யூ கேமராவை பொருத்தவரை, 5 கேமராக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மூன்று கேமராக்கள் மற்றும் முன்புறம் இரண்டு செல்ஃபி கேமராக்கள் கொண்டுள்ளது. பின்புறம் 12 மெகா பிக்ஸல் சென்சார் f/1.5 அப்பச்செர், பிரைமெரி லென்ஸ் கொண்ட கேமரா, 16 மெகா பிக்ஸல் சென்சார் அகலமாக காட்சிப்பதிவு செய்யும் லென்ஸ் கொண்ட மற்றும் 12 மெகா பிக்ஸல் சென்சார் தொலைதூர பார்வை லென்ஸ் கொண்ட கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் இரண்டு செல்ஃபி கேமராக்கள் உள்ளன.

அத்துடன் 3,300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் விரைவில் சார்ஜ் ஏறும் வகையில் 3.0 வயர்லெஸ் சார்ஜிங், யூஎஸ்பி - சி டைப் கொண்டுள்ளது. இந்த போன் 158.7x75.8x7.79mm அளவு மற்றும் 169 கிராம் எடை கொண்டுள்ளது.

 

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design and build quality
  • Good, versatile cameras
  • Large and vivid display
  • Feature-rich OS
  • Very good audio with headphones
  • Bad
  • Older Android version
  • Lacks proper stereo speakers
  • Heats quickly under stress
  • Minor camera quirks
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel + 5-megapixel
Rear Camera 12-megapixel + 16-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1
Resolution 1440x3120 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG V40 ThinQ price in India, LG V40 ThinQ specifications, LG V40 ThinQ, LG
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  2. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  3. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  5. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  6. OnePlus Nord 6 Series இந்திய அறிமுகம் டீஸ்; OnePlus Nord CE 6 BIS தரவுத்தளத்தில் கிடைக்கும்
  7. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  8. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  9. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  10. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.