விரைவில் அறிமுகமாகும் Lenovo Legion ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் என்ன..? - முழு விவரம் உள்ளே!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 23 ஜூலை 2020 12:17 IST
ஹைலைட்ஸ்
  • லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனில் 12GB மற்றும் 16GB ரேம் உள்ளது
  • இதில் 512GB மெமரி வழங்கப்பட்டுள்ளது
  • நீடித்த உழைப்பிற்கு டூயல் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 865+ SoC பிராசசர் வழங்கப்பட்டுள்ளது

லெனோவா தரப்பில் புதிதாக லெனோவா லீஜியன் என்ற ஸ்மார்ட்போன் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாக உள்ளது.

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமான லெனோவா அண்மைக் காலமாக சத்தமே இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது கலக்கலான 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்துள்ளது. இதன் பெயர் லெனோவா லீஜியன் ஆகும். இம்மாத இறுதியில் சீனாவில் லெனோவா லீஜியன் ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது இந்த போன். 

இந்த ஸ்மார்ட்போனின் அம்சமே அதன் செஃல்பி கேமராதான். ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக புதுப்புது டிசைன்களில் செல்ஃபி கேமராவை அமைத்து வருகிறார்கள். சாதாரணமாக முன்பக்கத்தில் ஓரத்தில் மட்டும் இருந்த கேமரா நடுமையத்தில் வந்தது. பின்பு, பாப்-அப் கேமராவாக உருவானது. 

அந்த வகையில், லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போனில் செல்ஃபி கேமரா பாப்-அப் கேமராவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளதுதான் சிறப்பு. இவ்வாறு பக்கவாட்டில் செஃல்பி கேமரா வைக்கப்படும் போது, பயன்பாட்டுக்கு எப்படி சாத்தியம் என்பது விரைவில் தெரியவரும். 

லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனில் கேமிங்கை லேண்ட்ஸ்கேப் மோட்டில் சர்வசாதாரணமாக விளையாடலாம்

மேலும், லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போனில் அடிப்படையாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.65 இன்ச் திரை, ஸ்நாப்டிராகன் 865+ SoC பிராசசர் உள்ளது. ஆண்ட்ராய்டு தளங்களில் இது பவர்ஃபுல் பிராசசர் ஆகும். டூயல் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கேமர்களுக்கு ஏற்றவகையில், கிடைமட்டமாக UI கவனம் செலுத்ப்பட்டுள்ளது.  இது அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 மற்றும் நுபியா ரெட் மேஜிக் 5S ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக அமைகிறது. பேட்டரியாக இதில் 2,500mAH கொண்ட இரண்டு அதாவது டூயல் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

லெனோவா லீஜியன் போன் டூயல் ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, அத்துடன் 16MP 120 டிகிரி வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதன் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இம்மாத இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அப்போது இதன் விலை என்னவாக இருக்கும் என்பது தெரியவரும். 


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.59-inch
Processor Qualcomm Snapdragon 865+
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.