ஜியோ போன் 2-இன் அடுத்த விற்பனை ஆகஸ்ட் 30ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஜியோ நிறுவனத்தின் த்தின் Jio.com இணயதளத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் ஜியோ போன் 2 முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. ஃப்ளாஷ் சேல் என்பதால் சில நிமிடங்களிலேயே மளமளவென்று விற்றுத்தீர்ந்தது. Add to cart வரை வந்த பலருக்குள் அதற்குள் கூட்டம் அதிகமாகி Page under maintenance என்று செய்தி மட்டுமே வந்தது. ஏற்கனவே இதன் முந்தைய வடிவம் அறிமுகமான ஒரே ஆண்டில் இரண்டரை கோடி போன்கள் விற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. QWERTY விசைப்பலகையுடன் கூடிய 2.4” டிஸ்பிளே (320*240) உடையது இப்புதிய போன். இப்போனை வாங்குகையில் 49ரூ, 99ரூ, 153ரூ ஆகிய மூன்று பிளான்களில் ஏதேனும் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஜியோ 2 போனின் விலை, திறன் குறிப்பீட்டு விவரங்கள்:
ஜியோ 2 போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 2999 ஆகும். முதல் போனுக்கு அளிக்கப்பட்டதுக்குப் போன்று மூன்றாண்டுகள் கழித்து இக்கட்டணத்தைத் திரும்பப்பெறும் வசதி இப்போனுக்குக் கிடையாது. ஆர்டர் செய்தவர்களுக்கு இன்னும் ஐந்து – ஏழு வேலை நாள்களில் டெலிவரி செய்யப்படு என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
டூயல் நானோ சிம் வசதியைக் கொண்டுள்ள ஜியோ 2 KaiOS இயங்குதளத்தில் இயங்குகிறது. 2.4”QVGA டிஸ்பிளே உள்ளது. 512MB ரேமும், 4ஜிபி உள்ளடங்கிய மெமெரியும் கொண்டுள்ளது. இதனை 128 ஜிபி வரை மெமரி கார்டு கொண்டு நீட்டித்துக்கொள்ளலாம். 2 மெகா பிக்சல் பின்புற கேமராவும் முன்புறத்தில் VGA கேமராவும் உள்ளன. 4ஜி VoLTE, VoWi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ், NFC, பண்பலை ஆகிய பல வசதிகளும் உள்ளன. குரல் கட்டளை மூலம் கூகுள் உதவியாளரை இயங்கச் செய்யலாம். பேட்டரி கொள்திறன் 2000mAh.
முந்தைய மாடலில் இருந்து டிசைனில் ஜியோ 2 பெரிதும் வேறுபட்டுள்ளது. மேல்-கீழ், இட-வல நேவிகேசன் பட்டன்கள் இதற்கு பிளாக்பெர்ரி போன்ற தோற்றத்தை அளிக்கிறது. டிஸ்பிளேவும் முந்தையதை விட அகன்றதாக உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்