இந்தியாவில் இரண்டாவது 5ஜி போன் அறிமுகம்! 

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 25 பிப்ரவரி 2020 14:34 IST
ஹைலைட்ஸ்
  • iQoo 3, 6.44-இன்ச் முழு எச்டி + சூப்பர் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • இது hole-punch-ல் வைக்கப்பட்டுள்ள 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது
  • iQoo 3, iQoo UI 1.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது

iQoo 3, 20x டிஜிட்டல் ஜூம் ஆதரவுடன், மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸைக் கொண்டுள்ளது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iQoo 3 இறுதியாக இன்று வெளியானது. பெரிதும் சந்தைப்படுத்தப்பட்ட முதன்மை 5ஜி போன் மொபைல் கேமிங் ஆர்வலர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த போன் Quantum Silver, Volcano Orange மற்றும் Tornado Black கலர் ஆப்ஷன்களில் வருகிறது.


இந்தியாவில் iQoo 3-யின் விலை: 

iQoo 3, 4G மற்றும் 5G வேரியண்டுகளில் வருகிறது, 5G ஆதரவு போனின் டாப்-எண்ட் ஸ்டோரேஜுக்கு மட்டுமே. விலை நிர்ணயம் செய்யும்போது, ​​iQoo 3's 4G-ஒன்லி 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ.36,990 ஆகும், அதன் 4G-ஒன்லி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.39,990 விலைக் குறியிட்டைக் கொண்டுள்ளது. 5 ஜி ஆதரவுடன் வரும் iQoo 3-யின் டாப்-எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.44,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது Quantum Silver, Volcano Orange மற்றும் Tornado Black கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இது மார்ச் 4 மதியம் 12 மணிக்கு முதல் பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ iQoo.com வலைத்தளம் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

IQoo 3-யின் வெளியீட்டு சலுகைகளில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் ரூ.3,000 கேஷ்பேக், no-cost EMI மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,000 மதிப்புள்ள பலன்கள் ஆகியவை அடங்கும்.

iQoo 3-யானது 120 டிகிரி பார்வை கொண்ட 13 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸைக் கொண்டுள்ளது.

iQoo 3-யின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) iQoo 3, iQoo UI 1.0 உடன் ஆண்ட்ராய்டு 10 -ல் இயக்குகிறது. இது, 6.44-இன்ச் முழு-எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) எச்டிஆர் 10+ சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 409ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை LPDDR5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

iQoo 3 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது, f/1.79 aperture மற்றும் சோனி IMX582 சென்சாருடன் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இதற்கு, f/2.46 aperture மற்றும் 20x டிஜிட்டல் ஜூம் வெளியீட்டுடன் 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உதவுகிறது. f/2.2 aperture மற்றும் 120 டிகிரி பார்வை கொண்ட 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஸ்னாப்பரும், பொக்கே ஷாட்ஸ்களுக்கு f/2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் portrait கேமராவும் உள்ளன. முன்புறத்தில், ஒரு f/2.45 aperture மற்றும் 4K வீடியோ பிடிப்புக்கான ஆதரவுடன் 16 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர் உள்ளது, இது hole-punch-ல் வைக்கப்பட்டுள்ளது.

iQoo 3-யானது 256 ஜிபி வரை உள் UFS 3.1 ஸ்டோரேஜை வழங்குகிறது. iQoo 3-யின் இணைப்பு விருப்பங்களில் 5G, 4G, Bluetooth 5.1, USB Type-C 2.0, GPS மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இது தனியுரிம 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,440 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. iQoo, 158.51 x 74.88 x 9.16 மிமீ அளவு மற்றும் 214.5 கிராம் எடையை வழங்குகிறது. அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே கைரேகை உணர்திறன் தொகுதி உள்ளது, அதே நேரத்தில் iQoo 3-யில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, compass, gyroscope மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • 5G ready (top-end variant only)
  • Stunning display
  • Fast charging
  • Shoulder buttons for gaming
  • Bad
  • Camera performance needs improvement
  • Preinstalled bloatware
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4440mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iQoo, iQoo 3, iQoo 3 price in India, iQoo 3 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.