இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது iQoo 3! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 4 மார்ச் 2020 16:17 IST
ஹைலைட்ஸ்
  • iQoo 3 பிப்ரவரி 25 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • இந்தியாவுக்கான நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்
  • IQoo 3 ரூ.36,900 விலையில் தொடங்குகிறது

iQoo 3, 5G திறன் கொண்டது மற்றும் 55W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது

iQoo பிராண்டின் இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போனான iQoo 3, இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் iQoo 3 பிப்ரவரி 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது இந்தியாவில் வெளியான இரண்டாவது 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். 


இந்தியாவில் iQoo 3 விலை, வெளியீட்டு சலுகைகள் மற்றும் விற்பனை நேரம்: 

iQoo 3-யின் 8 ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.36,990-யாகவும், 8 ஜிபி/256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.39,990-யாகவும், இறுதியாக டாப்-ஸ்பெக்ஸட் 12 ஜிபி/256 ஜிபி 5ஜி வேரியண்டின் விலை 44,990-யாகவும் உள்ளஹ்து. இது, ஐசிஐசிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியுடன்,  பிளிப்கார்ட் வழியாக (via Flipkart) விற்கப்படும். கிரெடிட் கார்டு கொள்முதல் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி பெறலாம். மேலும், பழைய போன்களின் எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.3,000 தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது. 12 மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷனும் உள்ளது.

இந்த விற்பனை மார்ச் 4 புதன்கிழமை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும். மேலும், iQoo.com-ல் வாங்கவும் கிடைக்கும்.


iQoo 3-யின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) iQoo 3, iQoo UI 1.0 உடன் ஆண்ட்ராய்டு 10 -ல் இயக்குகிறது. இது, 6.44-இன்ச் முழு-எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) எச்டிஆர் 10+ சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 409ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை LPDDR5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

iQoo 3 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது, f/1.79 aperture மற்றும் சோனி IMX582 சென்சாருடன் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இதற்கு, f/2.46 aperture மற்றும் 20x டிஜிட்டல் ஜூம் வெளியீட்டுடன் 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உதவுகிறது. f/2.2 aperture மற்றும் 120 டிகிரி பார்வை கொண்ட 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஸ்னாப்பரும், பொக்கே ஷாட்ஸ்களுக்கு f/2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் portrait கேமராவும் உள்ளன. முன்புறத்தில், ஒரு f/2.45 aperture மற்றும் 4K வீடியோ பிடிப்புக்கான ஆதரவுடன் 16 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர் உள்ளது, இது hole-punch-ல் வைக்கப்பட்டுள்ளது.

iQoo 3-யானது 256 ஜிபி வரை உள் UFS 3.1 ஸ்டோரேஜை வழங்குகிறது. iQoo 3-யின் இணைப்பு விருப்பங்களில் 5G, 4G, Bluetooth 5.1, USB Type-C 2.0, GPS மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இது தனியுரிம 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,440 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. iQoo, 158.51 x 74.88 x 9.16 மிமீ அளவு மற்றும் 214.5 கிராம் எடையை வழங்குகிறது. அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே கைரேகை உணர்திறன் தொகுதி உள்ளது, அதே நேரத்தில் iQoo 3-யில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, compass, gyroscope மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • 5G ready (top-end variant only)
  • Stunning display
  • Fast charging
  • Shoulder buttons for gaming
  • Bad
  • Camera performance needs improvement
  • Preinstalled bloatware
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4440mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iQoo, iQoo 3, iQoo 3 price in India, iQoo 3 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  2. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  3. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  4. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  5. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  6. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  7. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  8. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  9. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  10. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.