ரிலீஸுக்கு முன்பே லீக்கான புதிய ஐபோன் எஸ்இ விவரங்கள்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 3 ஏப்ரல் 2020 13:50 IST
ஹைலைட்ஸ்
  • ஐபோன் 9, ஆப்பிளின் புதிய மலிவு ஐபோனின் பெயராக இருக்காது
  • ஆப்பிள் இதை புதிய ஐபோன் எஸ்இ / ஐபோன் எஸ்இ (2020) என்று அழைக்கும்
  • புதிய ஐபோன் எஸ்இ மாடல் ஆப்பிள் ஏ 13 சிப்பை உள்ளடக்கியது

புதிய ஐபோன் SE-யின் இருப்பை ஆப்பிள் ஸ்டோர் ஒரு திரை பாதுகாப்பான் பட்டியல் மூலம் பரிந்துரைத்துள்ளது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 4.7 இன்ச் “ஐபோன் எஸ்இ” 2020 மாடல் வெளியாக தயாராக உள்ளது. மேலும், வரவிருக்கும் ஐபோன் எஸ்இ மாடலின் காலர் ஆப்ஷன்கள் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டுகள் ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோரில் வெளிவந்துள்ளன.

ஆப்பிள் ஸ்டோரில் உள்ள பட்டியல் பெல்கின் இன்விசி கிளாஸ் அல்ட்ரா ஸ்கிரீன் பாதுகாப்பைக் காட்டுகிறது. தற்போதுள்ள ஐபோன் எஸ்இ மாடலானது iPhone 5s போன்று வருகிறது. இதன் கேமரா மற்றும் பிராசசர் iPhone 6s போன்று உள்ளது. ஐபோன் எஸ்இ, ஐபோன் 8-ன் வடிவமைப்பைப் பயன்படுத்தும் என்று ஆப்பிள் ஸ்டோர் பட்டியல் தெரிவிக்கிறது.

Apple​ 4.7- மற்றும் 5.5 இன்ச் அளவுகளில் ஸ்கிரீன் பாதுகாப்பாளரை வழங்குகிறது. வழக்கமான மாடலுடன் iPhone SE மாடலும், வேலையில் இருப்பதாக முந்தைய அறிக்கைகள் பரிந்துரைத்ததுக்கு முரணானது. ஆயினும்கூட, நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இரண்டையும் சேர்க்கக்கூடும். இந்த ஆன்லைன் பட்டியலானது, ஐபோன் எஸ்இ (2020) வெளியீடு உடனடி இருக்கக்கூடும் என்று இது அறிவுறுத்துகிறது.

9to5Mac, புதிய ஐபோன் எஸ்இ பற்றிய சில புதிய விவரங்களையும் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் மாடலில் கருப்பு, வெள்ளை மற்றும் PRODUCT (சிவப்பு) ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது சிலிகான் மற்றும் தோல் பொருட்களில் ஐந்து தனித்துவமான உத்தியோகபூர்வ கேஸ்கலால் இணைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த போன் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வழங்கப்படும்.

புதிய அறிக்கைகள் புதிய ஐபோன் எஸ்இ விலையை 399 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,300)-யாக நிர்ணயம் செய்யலாம். இந்த போன் டச் ஐடி கைரேகை சென்சாரைத் தக்க வைத்துக் கொள்ளும்.

Advertisement

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், புதிய ஐபோன் எஸ்.இ விநியோகத்தில் சில தாமதம் ஏற்படும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple iPhone SE, new iPhone SE, iPhone SE 2020, iPhone SE 2, iPhone 9, Apple
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.