இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு iOS 13 செட் ஆகாது: எந்தெந்த போன்கள்? தகவல்கள் உள்ளே!

இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு iOS 13 செட் ஆகாது: எந்தெந்த போன்கள்? தகவல்கள் உள்ளே!

இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு iOS 13 செட் ஆகாது

ஹைலைட்ஸ்
  • ஐபோன் 6, மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய போன்களுக்கு iOS 13 செட் ஆகாது
  • ஐபாட் மினி 2 மற்றும் ஐபாட் ஏர் ஆகிய சாதனங்களும் இந்த லிஸ்டில் உள்ளது
  • ஜூன் மாதம் நடக்கவுள்ள நிகழ்வின்பொழுது iOS 13-ஐ வெளியிடவுள்ளது
விளம்பரம்


ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை உபயோகிப்பதன் பயன் என்னவென்றால், அந்த மாடல் எவ்வளவு பழையதாக இருந்தாலும், புதிதாக வரும் அப்டேட்கள் அவற்றிற்கு பொருந்தும். அதற்கு உதாரணம் எப்போது வந்த ஆப்பிள் ஐபோன் 5-விற்கு இப்போது வெளியாகும் iOS 12 செட் ஆவது தான். ஆனால் இப்போது புதிதாக வந்துள்ள தகவலின்படி, இதில் சிறிது மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் iOS 13-ஐ சில போன்கள் பெறாமல் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக வரவுள்ள ஆப்பிள் iOS 13-ன் அப்டேட் இந்த ஸ்மார்ட்போன்களான ஐபோன் 5s, ஐபோன் SE, ஐபோன் 6, மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய போன்களுக்கு கிடைக்கப்பெறாமல் போகலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த அப்டேட்-ஐ ஆப்பிள் நிறுவனம் ஐபாட் மினி 2 மற்றும் ஐபாட் ஏர் ஆகிய சாதனங்களுக்கும் நிறுத்தி வைக்கப்படப்போவதாக ஐபோன்சாப்ட்-ன் அறிவிப்பின்படி தெரியவருகிறது. 

ஐபோன் 6, மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டவை. இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிட்டு 5 வருடங்கள் ஆகிறது. மேலும்  ஐபோன் SE ஸ்மார்ட்போன் வெளியாகி வெரும் மூன்று வருடங்களே ஆகிறது. ஒருவேளை இந்த தகவல் உறுதியானதாக இருந்தால், நிறைய ஐபோன் வாடிக்கையாளர்கள், தங்கள் ஸ்மார்ட்போன்களை தூக்கி எறிந்துவிட்டு, புது ஸ்மார்ட்போன்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவர். 

இந்த புதிய அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள தன் ஆண்டுவிழா நிகழ்வின்பொழுது வெளியிடவுள்ளது. iOS 13 மட்டுமின்றி, லேப்டாப்கள் மற்றும் கணினிகளுக்கான macOS 10.15, மற்றூம் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான watchOS 6 ஆகியவற்றையும் இந்த நிகழ்வின் போழுது வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, WWDC 2019, iOS 13
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »