iOS 13.1.3 & iPadOS 13.1.3 software அப்டேட் ரிலீஸ்! Install செய்வது எப்படி?....

iOS 13.1.3 & iPadOS 13.1.3 software அப்டேட் ரிலீஸ்! Install செய்வது எப்படி?....
விளம்பரம்

ஆப்பிள், செவ்வாயன்று (நேற்று) iOS 13.1.3-ஐ iPadOS 13.1.3 உடன் வெளியிட்டது. பிழைகளை சரிசெய்ய மற்றும் செயல்திறனை மேம்படுத்த, சில நாட்களுக்கு முன்பு  iOS 13.1.2 மென்பொருளுக்கான சிறிய புதுப்பிப்புகளுடன் வெளியிடப்பட்டது.

iOS 13.1.3 புதுப்பிப்பு இன்கம்மிங் காலுக்கு, சாதனம் ஒலிப்பதை (ringing) அல்லது அதிர்வுறுவதைத் (vibrating) தடுக்கக்கூடிய ஒரு சிக்கலைக் குறிக்கிறது. 

iCloud Backup மற்றும் பலவற்றிலிருந்து மீட்டெடுத்த (restoring) பிறகு Voice Memos recordings-ஐ பதிவிறக்கம் செய்யமுடியாத சிக்கலை புதிய அப்டேட் சரிசெய்கிறது.

இதற்கிடையில், மின்னஞ்சலில் ஒரு சந்திப்பு அழைப்பைத் திறப்பதைத் தடுக்கக்கூடிய சிக்கலை iPadOS 13.1.3 அப்டேட் சரிசெய்கிறது. 

கூடுதலாக, iCloud Backup-ல் இருந்து restoring செய்யும் போது, செயலிகள் பதிவிறக்கத்தில் இருக்கும் சிக்கலைக் அப்டேட் குறிக்கிறது.

iOS மற்றும் iPadOS 13.1.3 அப்டேட்ஸ் தகுதிவாய்ந்த அனைத்து சாதனங்களிலும் over-the-air-ல் கிடைக்கின்றன. iOS 13.1.2 மற்றும் iPadOS 13.1.2 வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு iOS 13.1.3 மற்றும் iPadOS 13.1.3 வெளிவருகிறது.

iOS 13.1.3 மற்றும் iPadOS 13.1.3-ஐ எப்படி பதிவிறக்கம் செய்வது?

iPhone அல்லது iPad-ல் iOS 13.1.3 அல்லது iPadOS 13.1.3 அப்டேட்டை பதிவிறக்க, Settings > General > Software Update-ற்குச் செல்லவும். உங்கள் சாதனத்தில் போதுமான அளவு பேட்டரி இருப்பதையும், வைஃபை இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Apple
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »