3,020mAh பேட்டரியுடன் வருகிறது Huawei Y6s!

3,020mAh பேட்டரியுடன் வருகிறது Huawei Y6s!

Huawei Y6s, ஆன்போர்டில் 3GB RAM-ஐ பேக் செய்கிறது

ஹைலைட்ஸ்
  • Huawei Y6s, dewdrop notch உடன் 6.09-inch HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
  • இந்த போனின் ஒற்றை பின்புற கேமரா அமைப்பு, 3.5mm audio jack உள்ளது
  • Huawei Y6s, Micro-USB port உடன் வருகிறது. Bluetooth v4.2-ஐ ஆதரிக்கிறது
விளம்பரம்

ஹவாய், அதன் Huawei Y6s போனை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது. இந்த போன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Y6 (2019) போனின் வித்தியாசமான வேரியண்டாகும்.


Huawei Y6s-ன் விலை:

Huawei Y6s-ன் விலை மற்றும் கிடைக்கும் தன்மையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த போன் இப்போது அதன் அமெரிக்க இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், Huawei, விற்பனை விவரங்களை விரைவில் வெளியிட வேண்டும். Huawei Y6s இரண்டு கலர் ஆப்ஷன்களில் பட்டியலிடப்பட்டுள்ளன - Orchid Blue மற்றும் Starry Black.


Huawei Y6s-ன் விவரக்குறிப்புகள்:

Huawei Y6s, Android 9 Pie அடிப்படையிலான EMUI 9.0-ல் இயங்குகிறது. மேலும், Huawei Y6s, dewdrop notch மற்றும் 283ppi pixel density உடன் 6.09-inch HD+ (720x1560 pixels) TFT IPS டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3GB RAM உடன் இணைக்கப்பட்டு quad-core MediaTek Helio P35 (MTK MT6765) SoC-யால் இயக்கப்படுகிறது. ஆன்போர்டு ஸ்டோரேஜில் 32GB மற்றும் 64GB ஆகியவை அடங்கும். இந்த ஸ்டோரேஜை microSD card வழியாக (512GB) விரிவாக்கலாம்.

Huawei Y6s-ல், f/1.8 aperture மற்றும் rear LED flash ஆதரவுடன் 13-megapixel rear கேமரா பொருத்தப்பட்டிருக்கும். முன்புறத்தில், f/2.0 aperture மற்றும் fixed focus capabilities உடன் 8-megapixel உள்ளது.

Huawei Y6s, 3,020mAh பேட்டரியை பேக் செய்கிறது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, GPS, Glonass, Bluetooth 4.2, Micro USB, Wi-Fi 802.11 b/g/n மற்றும் 3.5mm ear jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் proximity sensor, ambient light sensor, gravity sensor மற்றும் fingerprint sensor ஆகியவை அடங்கும். இந்த போன் 156.28x73.5x8mm அளவீடையும் 150 கிராம் எடையையும் கொண்டதாகும்.

  • KEY SPECS
  • NEWS
Display 6.09-inch
Processor MediaTek Helio P35 (MT6765)
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3020mAh
OS Android 9
Resolution 720x1560 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »