ஹூவாய் Y6 பிரைம் (2019) ஸ்மார்போன் சீனாவில் அறிமுகமாகி சில நாட்களிலேயே தற்போது பாகிஸ்தானில் 'பிரைம்' என பெயர் கொண்டு அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பைய், மீடியாடெக் ஹூலியோ போன்ற மென்பொருட்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 'டியு டிராப்' திரையை கொண்டுள்ளது.
ஹூவாய் Y6 பிரைம் (2019) விலை:
ஹூவாய் நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்புக்கு இன்னும் விலை பட்டியலை வெளியிடாத நிலையில் பாகிஸ்தான் தளங்களில் இந்த போன் ரூபாய் 10,600 வரை விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதிகாரப் பூர்வமான அறிக்கையின் படி இந்த தயாரிப்பு ஏம்பர் பிரவுன், மிட்நையிட் பிளாக் மற்றும் சபையர் பிளூ போன்ற நிறங்களில் வெளியாகுகிறது. இந்தியாவில் இன்னும் வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் ஏதும் வரவில்லை என்றாலும் விரைவில் இங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூவாய் Y6 பிரைம் (2019) அமைப்புகள்:
இரண்டு சிம்-ஸ்லாட் வசதி ஆண்ட்ராய்டு 9 பைய், மீடியாடெக் ஹூலியோ போன்ற மென்பொருட்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 6.9 இஞ்ச் ஹெச்டி திரையை கொண்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
கேமரா வசதியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமராவும், முன்புறதில் 8 மெகா பிக்சல் கேமராவும் இடம்பெற்றுள்ளது. போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ள நிலையில் 3,020mAh பேட்டரி வசதியையும் இந்த போன் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்