ஹூவாய் (Huawei) நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டிராய்டு கோ ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை Y5 லைட் ஸ்மார்ட்போன் 2018-ல் ஹூவாய் வெளியிட்ட Y3 மாடலின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது.
18:9 அளவு டிஸ்பிளே கொண்ட இந்த போன் 8 மெகா பிக்சல் கேமரா மற்றும் 1ஜிபி ரேமுடன் வருகிறது. ஆண்ட்ராயிடின் 8.1 ஓரியோ வர்ஷனுடன் வெளியாகியுள்ளது. பலர் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 9 லையிட் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் 8.1 மட்டுமே கிடைத்துள்ளது.
மேலும் இந்த வகை ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹூவாய் Y5 லைட் ஸ்மார்ட்போன் சுமார் 8,200 ரூபாய்க்கு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. போன்களின் நிறம் குறித்து பார்க்கும் பொழுது நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வெளியாகும் தேதி இன்னும் சரியாக தெரியாத நிலையில், பாகிஸ்தானை அடுத்து இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது. 3,020mAh பேட்டரி மற்றும் 16 ஜிபி நினைவகத்துடன் இந்த பட்ஜட் போன் விற்பனைக்கு தயார் ஆகுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்