Photo Credit: 91Mobiles
3C சான்றிதழில் வதந்தியான Huawei Nova 6-யானது காணப்பட்டது. அதன் உடனடி வருகையை மீண்டும் வலியுறுத்துகிறது. தொலைபேசி 40W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது இது மிக விரைவாக பேட்டரியை சார்ஜ் செய்யும். CCC-யில் பட்டியலிடப்பட்ட மாடல், 4 ஜி மாறுபாடு மற்றும் 5 ஜி மாறுபாடு சான்றிதழ் தளத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தனித்தனியாக, Huawei Nova 6, 5ஜி ரெண்டர்களும் ஆன்லைனில் கசிந்துள்ளன. இது தொலைபேசியில் dual hole-punch டிஸ்ப்ளே இருக்கும் என்பதைக் குறிக்கிறது. பின்புறத்தில், மேல் இடது மூலையில் பல கேமராக்கள் செங்குத்தாக வரிசைபடுத்தியுள்ளன.
3C பட்டியலுடன் தொடங்கி, மாடல் எண் WLZ-AL10 உடன் Huawei Nova 6 காணப்பட்டது. தொலைபேசி ஒரு HW-100400C00 சார்ஜருடன் அனுப்பப்படும் என்பதையும், இது 40W வரை வேகத்தை வழங்கும் என்பதையும் பட்டியல் வெளிப்படுத்துகிறது. WLZ-AN00 என்பது 5G மாறுபாட்டிற்கான மாடல் எண். மேலும் இது இதுவரை 3C-ல் தோன்றவில்லை. முதலில் (NashvilleChatterClass) நாஷ்வில்சாட்டர் கிளாஸில் இந்த பட்டியல் காணப்பட்டது.
குறிப்பிட்டுள்ளபடி, Huawei Nova 6 ரெண்டர்களும் சில நாட்களுக்கு முன்பு 91 மொபைல்களால் கசிந்தன. பின்புறம் ஒரு gradient finish-ஐக் காணலாம். இதில், rear fingerprint சென்சார் எதுவும் காணப்படவில்லை. எனவே, Nova 6-ல் in-display fingerprint சென்சார் வைத்திருப்பது சாத்தியமாகும். Nova 6-ல் டிஸ்பிளேவுக்கு கீழே ஒரு சிறிய chin உள்ளதோடு, மூன்று பின்புற சென்சார்கள் செங்குத்தாக வரிசைபடுத்தியுள்ளனர். அதனுடன் ஒரு LED flash உள்ளதோடு பின்புறத்தில் laser autofocus system-மும் இருக்கலாம்.
Huawei Nova 6, 5G ஆதரவுடன் வருவதாகவும், டிசம்பரில் எப்போதாவது தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்