ஹூவாய் நிறுவனம் இன்று தனது தயாரிப்பான ஹூவாய் நோவா 4e ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் பட்ஜெட் போன்களில் ஓன்றான இந்த ஸ்மார்ட்போன் இரண்டு கிளாஸ் பாடியை கொண்டுள்ளது.
பின்புறத்தில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்ட இந்த போன் 6.15 இஞ்ச் திரையை பெற்றுள்ளது. மேலும் இந்த நோவா 4e மூன்று கேமராக்கள் மற்றும் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவுடன் வெளியாகுகிறது. சீனாவை தொடர்ந்து இந்த போன் மலேசியாவிலும் அறிமுகமாகியுள்ளது.
ஹூவாய் நோவா 4e, சீனாவில் ரூ.21,000 மதிப்பில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த விலை நோவா 4e போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128 சேமிப்பு வசதிகொண்ட மாடலுக்கு பொருந்தும். அதுபோல 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி தயாரிப்பு ரூ.24,000 மதிப்புக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சீனாவில் இந்த போனுக்கான முன்பதிவு வரும் மார்ச் 21 ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் இந்த தயாரிப்பு கார்லாந்து புளூ, பியர்ல் வையிட் மற்றும் மேஜிக் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகவுள்ளது. ஆச்சரியமாக இந்த நோவா 4e (6ஜிபி+128 ஜிபி) போன்கள் சீனாவில் வெளியாவதற்கு முன்னர் மலேசியாவில் வெளியாகவுள்ளது.
ஹூவாய் நோவா 4e அமைப்புகள்:
டூயல் நானோ சிம்கார்ட் வசதிகொண்ட ஹூவாய் நோவா 4e ஸ்மார்ட்போன், 6.15 இஞ்ச் கொண்ட ஹெச்டி திரையை கொண்டுள்ளது. ஆண்டுராய்டு 9 பைய் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஹைய் சிலிக்கோன் கிரின் 710 பிராசஸ்சரால் இயங்குகிறது.
4 மற்றும் 6 ஜிபி ரேம் மாடலாக வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி வரை சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ள நிலையில் அவைகள் 24/8/2 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டது.
மேலும் இந்த போனில் இருக்கும் செல்ஃபி கேமரா 32 மெகா பிக்சல் சென்சாருடன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதர அமைப்புகளுடன் ஹூவாய் நோவா 4e ஸ்மார்ட்போன் 3,340mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்