முன்னதாக எச்.டி.சி நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறிய ஒரு நாளிலேயே, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 14 (புதன்கிழமை) வெளியாகும் என அறிவித்துள்ளது. ஃப்ளிப்கார்ட் மொபைல் செயலியில், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவிப்பதற்காக பிரத்யேகமாக ஒரு பக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தாய்வானில் அறிமுகமான 'டிசயர் 19+' (Desire 19+) ஸ்மார்ட்போனாக இந்த புதிய ஸ்மார்ட்போன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பக்கத்தில் எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய எந்த தகவலும் பெரிதாக இடம்பெறவில்லை. எச்.டி.சி நிறுவனத்தின் மொபைல் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை அந்த பக்கம் விவரிக்கிறது. கடந்த திங்கட்கிழமை வெளியான டீசர் வீடியோவிலும் இதுவே இடம் பெற்றிருந்தது. அந்த பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி குறிப்பிடப்படடுள்ளது.
எச்.டி.சி டிசயர் 19+ ஸ்மார்ட்போன், முன்னதாக இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் தாய்வானில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் தான் இழந்த இடத்தை இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தால் மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனினும் GSMArena-வின் தகவல்படி, இந்த நிறுவனம் வைல்ட்-பயர் (Wildfire) என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் எனக் கூறியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அந்த தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் HD+ (720x1520 பிகசல்கள்) திரையை கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் கேமராவுடன், 19:9 திரை விகிதத்தினாலான திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டிருக்கலாம். மீடியாடெக் ஹீலியோ P23 எஸ் ஓ சி ப்ராசஸர், 3,500mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்