4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஹானர் பிளே 4டி புரோ, ஹானர் பிளே 4டி அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 10 ஏப்ரல் 2020 13:52 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் ப்ளே 4 டி புரோ, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆப்ஷன்களில் வருகிறது
  • ஹானர் ப்ளே 4T, ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது
  • ஹானர் ப்ளே 4 டி புரோ, ஹைசிலிகான் கிரின் 810 SoC-யால் இயக்கப்படுகிறது

ஹானர் ப்ளே 4 டி புரோ வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்பிளே நாட்ச்சுடன் வருகிறது

Honor-ன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் - ஹானர் பிளே 4 டி புரோ மற்றும் ஹானர் பிளே 4 டி. ஹானர் ப்ளே 4 டி புரோ வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்சுடன் வருகிறது. ஹானர் ப்ளே 4 டி ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 


ஹானர் பிளே 4டி புரோ விலை:

Honor Play 4T Pro-வின் அடிப்படை 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை சிஎன்ஒய் 1,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,200)-யாகவும், அதன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 1,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,400)-யாகவும் உள்ளது. இந்த போன் ப்ளூ, எமரால்டு மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த போன் VMall மூலம் இன்று முதல் கிடைக்கிறது.  ​

Advertisement


ஹானர் பிளே 4டி விலை:

Honor Play 4T-யின் ஒரே 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை சிஎன்ஒய் 1,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,900) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் எமரால்டு வண்ண ஆப்ஷன்களில் வருகிறது. போனின் விற்பனை ஏப்ரல் 21 அன்று நடைபெறுகிறது.


ஹானர் பிளே 4டி புரோ விவரங்கள்:

ஹானர் ப்ளே 4 டி புரோ டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் மேஜிக் யுஐ 2.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.3 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், ARM Mali-G52 MP6 GPU மற்றும் 8 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் HiSilicon Kirin 810 SoC-யைக் கொண்டுள்ளது. 

இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.

Advertisement

இந்த போன், 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. ஹானர் ப்ளே 4 டி ப்ரோ 22.5W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் 157.4x73.2x7.75 மிமீ அளவு மற்றும் 165 கிராம் எடையும் கொண்டது.


ஹானர் பிளே 4டி விவரங்கள்: 

ஹானர் ப்ளே 4 டி டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இந்த போன், மேஜிக் யுஐ 3.1 உடன் Android 10-ல் இயக்குகிறது. இது 6.39 இன்ச் எச்டி + (720x1,560 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் ARM Mali-G51 GPU மற்றும் 6GB RAM உடன் ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 710A SoC-யைக் கொண்டுள்ளது. 

Advertisement
ஹானர் ப்ளே 4 டி ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும்

இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் ப்ளாஷ் உடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.

இந்த போன், 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. ஹானர் ப்ளே 4 டி 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் 159.81 × 76.13 × 8.13 மிமீ அளவு மற்றும் 176 கிராம் எடை கொண்டதாகும்.

Advertisement
 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.