108MP ரியர் கேமரா 50MP செல்பி கேமரா பட்டைய கிளப்பும் HMD Orka

108MP ரியர் கேமரா 50MP செல்பி கேமரா பட்டைய கிளப்பும் HMD Orka

Photo Credit: HMD

HMD ஓர்கா நீலம், பச்சை மற்றும் ஊதா வண்ண விருப்பங்களில் கிடைக்கும்

ஹைலைட்ஸ்
  • HMD Orka 108MP ரியர் கேமரா 50MP செல்பி கேமராவுடன் வருகிறது
  • குவால்காம் வழங்கும் ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட் இருக்கலாம்
  • 6.78-இன்ச் 120Hz முழு-எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி திரையைப் பெறலாம்
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது HMD Orka செல்போன் பற்றி தான்.


HMD Glonal நிறுவனம் சமீபத்தில் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்தது. இப்போது அடுத்தபடியாக நிறுவனம் HMD Orka என்ற புதிய Budget segment smartphone அறிமுகம் செய்கிறது. இது 108MP கேமராவுடன் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. அதில் வடிவமைப்பு, வண்ணம் மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியானது.

HMD Orka அம்சங்கள்

HMD Orka நீலம், பச்சை மற்றும் ஊதா வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று பதிவுகள் தெரிவிக்கிறது. பின்புற பேனலின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ள செவ்வக கேமரா யூனிட் உடன் HMD ஓர்கா தோன்றுகிறது. மாட்யூல் கேமரா சென்சார், எல்இடி ஃபிளாஷ் யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் 108MP AI கேமரா என்று பொறிக்கப்பட்ட உரையுடன் காணப்படுகிறது.
HMD Orka மெலிதான பெசல்கள் கொண்ட தட்டையான திரை, சற்று தடிமனான பாடி மற்றும் முன் கேமராவை வைக்க மேலே மையப்படுத்தப்பட்ட துளை-பஞ்ச் ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளது.


இதுவரை வெளியான தகவல் படி, HMD Orka 6.78-இன்ச் முழு-HD+ ஐபிஎஸ் LCD திரையை 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. குவால்காம் வழங்கும் ஸ்னாப்டிராகன் 5G சிப்செட் மூலம் ஸ்மார்ட்போன் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சரியான SoC சிப் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இந்த போன் 8ஜிபி ரேம் வசதியுடன் வரும் என கூறப்படுகிறது.


HMD Orka செல்போன் மாடல் 108 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா சென்சார் AI அம்சங்களால் சப்போர்ட் செய்யப்படுகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா சென்சார் கேமரா இருக்கும். இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த சில வாரங்களில் ஆன்லைனில் வெளிவரலாம் என தெரிகிறது.


மிட் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 108MP ரியர் கேமரா மற்றும் 50MP செல்பி கேமராவை வழங்கி, மக்களை கவர்ந்திழுக்க HMD திட்டமிட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இது 5000mAh பேட்டரி உடன் வெளிவர அதிக வாய்ப்பிருப்பதாக லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. HMD Okra ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 15,000 முதல் ரூ.20,000 பட்ஜெட்டிற்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: HMD Orka, HMD Orka Design, HMD Orka Specifications
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »