பிளிப்கார்ட் தனது ஆண்டு இறுதி விற்பனையைத் தொடங்கியுள்ளது. மேலும் அது ‘2019-ன் சிறந்த சலுகைகளை' பட்டியலிடுவதாகக் கூறுகிறது. இ-காமர்ஸ் நிறுவனம் iPhone 7, Redmi Note 7 Pro, Redmi 8, Realme 5 Pro, Vivo Z1 Pro போன்ற போன்களை குறைந்த விலையில் பட்டியலிட்டுள்ளது. இந்த விற்பனை டிசம்பர் 23 வரை நடைபெறும். மேலும், பிளிப்கார்ட் ICICI வங்கியுடன் கூட்டு சேர்ந்து கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. முக்கிய ஒப்பந்தங்களில் Realme 5 Pro ரூ. 11,999, மற்றும் Redmi 8 வெறும் ரூ. 8,999-யாக இந்த விற்பனை காலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பெரும்பாலான போன்களில் no-cost EMI மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை பட்டியலிட்டுள்ளது. மேலும், பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது, மேலும், மடிக்கணினிகளை ரூ. 19,999-க்கு குறைந்த விலையாக பட்டியலிட்டுள்ளது.
பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனை: போன் ஒப்பந்தங்கள்
பிரபலமான Redmi Note 7 Pro-வின் 4GB RAM/ 64GB ஸ்டோரேஜ் வேரியண்டை குறைந்த விலையில் ரூ. 9,999-க்கு வாங்கலாம். இதன் பொருள் பிளிப்கார்ட்டில் ரூ. 4,000 விலைக் குறைப்புடன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதே போல், Realme 5 Pro ரூ. 2,000 விலைக் குறைப்பை பெறுகிறது. மேலும், 4GB RAM மற்றும் 64GB பில்ட்-இன் ஸ்டோர்ரேஜின் அடிப்படை வேரியண்ட் தள்ளுபடி விலையாக ரூ. 11,999-க்கு கிடைக்கிறது. அதன் 6GB + 64GB மற்றும் 8GB + 128GB வேரியண்டுகள் முறையே ரூ. 12,999 மற்றும் ரூ. 14,999 விலைக் குறியீட்டுடன் பட்டியலிடப்படுள்ளது.
Redmi 8-ம் விலைக் குறைப்புடன் பட்டியலிடப்பட்டுள்ளது. 4GB RAM ஆப்ஷனின் விலை ரூ. 8,999-க்கு பதிலாக ரூ. 7,999-க்கு பட்டியலிடப்படுள்ளது. Vivo Z1 Pro போனின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 12,990-யாகவும், அதன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 13,990-யாகவும் பட்டியலிடப்படுள்ளது. இந்த இரண்டு வேரியண்டுகலும் விற்பனை காலத்தில் ரூ. 1,000 விலைக் குறைப்பை பெறுகிறது. மேலும், போனை ப்ரீபெய்ட் அடிப்படையில் வாங்கினால் ரூ. 1,000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம் என்று பிளிப்கார்ட் குறிப்பிடுகிறது.
Redmi K20 சீரிஸை ரூ. 19,999 முதல் வாங்கலாம். Reame X-ம் விலைக் குறைப்பை காண்கிறது. மேலும், அதன் 4GB + 128GB வேரியண்ட் ரூ. 15,999-யாக பட்டியலிடப்படுள்ளது. அதேபோல், அதன் 8GB + 128GB ஆப்ஷன் ரூ. 1,000 தள்ளுபடியுடன் ரூ. 18,999-யாக பட்டியலிடப்படுள்ளது. மேலும், ப்ரீபெய்ட் வழியாக வாங்கினால் ரூ. 1,000 தள்ளுபடியும் கிடைக்கும்.
பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனை: லேப்டாப்கள், மற்ற கேஜெட்ஸ் ஒப்பந்தங்கள்
விற்பனை காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்களுக்கு பிளிப்கார்ட் 75 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பட்டியலிட்டுள்ளது. 4GB RAM உடன் HP 15q APU Dual Core A9 லேப்டாப், 1TB HDD மற்றும் Windows 10 Home OS ரூ. 19,999-யாக விலையிடப்பட்டுள்ளது. Asus ROG gaming laptop குறைக்கப்பட்ட விலையாக ரூ. 57,990-க்கு பட்டியலிடப்படுள்ளது. மேலும், 8GB RAM உடன் Acer Swift 3 Core i5 8th Gen லேப்டாப், 512GB SSD மற்றும் Windows 10 OS ரூ. 44,990-க்கு பட்டியலிடப்படுள்ளது. 8GB RAM உடன் Apple MacBook Air Core i5 5th Gen, 128GB SSD மற்றும் MacOS Sierra வெறும் ரூ. 54,990-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எல்லா லேப்டாப் ஒப்பந்தங்களையும் இங்கே காணலாம்.
Apple Watch Series 3 குறைக்கப்பட்ட விலையாக மாதம் ரூ. 2,111 no-cost EMI ஆப்ஷனுடன் ரூ. 17,999-க்கு பட்டியலிடப்படுள்ளது. Apple iPad (6th Gen) 32 GB 9.7 inch ரூ. 22,999-க்கு வாங்கலாம். மேலும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ. 3,000 தள்ளுபடியை HDFC வழங்குகிறது. Noise Play Action மற்றும் Sports Camera ரூ. 2,999-யாக பட்டியலிடப்படுள்ளது. மேலும், ஸ்பீக்கர்கள் மற்றும் ஹெட்ஃபோன்களில் 70 சதவீதம் தள்ளுபடி உள்ளது. Power banks ரூ. 299 முதல் ஆரம்பமாகிறது. mobile covers வெறும் ரூ. 149 முதல் ஆரம்பமாகிறது. அனைத்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்கள் ஒப்பந்தங்களையும் ஒரே இடத்தில் காண, விற்பனை பக்கத்திற்குச் (sale page) செல்லுங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்