Photo Credit: Flipkart
அமேசான் நிறுவனத்தின் ஃப்ரீடம் செலிற்கு போட்டியாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' என்ற ஒரு விற்பனையைஅ அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்த 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்', ஆகஸ்ட் 8 அன்று துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்த விற்பனையின் சலுகைகளை ஒவ்வொன்றாக வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஐசிஐசிஐ வங்கியிடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்த வால்மார்ட் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது.
பிளிப்கார்ட்டின் இந்த 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனையில் மொபைல்போன்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள், டிவிக்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பிற பிரபலமான தயாரிப்பு வகைகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு கூடுதல் தள்ளுபடியுடன் ஃப்ளிப்கார்ட் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனையின் போது ஃபிளாஷ் சேலும் நடைபெறவுள்ளது.
ஃப்ளிப்கார்ட் ஏற்கனவே 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனைக்கு முன்னதாக மொபைல்போன்களுக்கு சில சிறந்த சலுகைகளை அறிவித்துள்ளது. ஆன்லைன் தளத்தில் இந்த விற்பனைக்காக ஒரு டீஸர் பக்கத்தை அறிமுகப்படுத்திய ஃப்ளிப்கார்ட் 'சிறந்த விற்பனைகள் குறைந்த் விலையில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி ,இப்போது முழு நேர விற்பனையிலுள்ள ரெட்மி நோட் 7 Pro, கூடுதலாக 1,000 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கப்பெரும்.
ஃப்ளிப்கார்ட் விற்பனையில் சியோமியின் ரெட்மி நோட் 7S மற்றும் ரியல்மே 3 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் 'மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் என்று உறுதியளித்துள்ளது. ஹானர் 20i தள்ளுபடி விலையில் 12,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. விவோ Z1 Pro ஸ்மார்ட்போனை முன்பே பணம் செலுத்தி பெருபவர்களுக்கு 1,000 ரூபாய் தள்ளுபடி. ஒப்போ K1 (4GB, 64GB) 12,990 ரூபாய் என்ற விலையிலும் மற்றும் ஹானர் 8C 7,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.
இந்த வாரம் ஃப்ளிப்கார்ட்டில் நடக்கவிருக்கும் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனையில் ஒப்போ R17 Pro, ஒப்போ ரெனோ 10X ஜூம், மற்றும் ஒப்போ F11 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களும் கூடுதல் தள்ளுபடியுடன் 7,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பெற்றுள்ளது.
மொபைல் போன்கள் தவிர்த்து, இந்த வாரம் ஃப்ளிப்கார்ட்டின் விற்பனையில் தொலைக்காட்சிகள் மற்றும் பிற சாதனங்களில் 75 சதவீதம் வரை தள்ளுபடியை பெற்றுள்ளது. சியோமியின் Mi 4A Pro 32 இன்ச் ஆண்ட்ராய்ட் டிவி மற்றும் VU-வின் அல்ட்ரா ஸ்மார்ட் 40 இன்ச் முழு HD LED டிவி ஆகியவை விற்பனையின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. சாம்சங்கின் புதிய 32-இன்ச் HD-ரெடி ஸ்மார்ட் டிவியும் விற்பனையின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
முன்னதாக, அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 11 வரை ஃப்ரீடம் சேல் விற்பனையை அறிவித்திருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்