பிளிப்கார்ட் நிறுவனம் தனது ‘மொபைல் போனான்சா' விற்பனையைத் துவங்கியுள்ளது. இந்த விற்பனை இன்று (19.2.2019) துவங்கி வரும் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தள்ளுபடி விலையில் போன்கள் விற்பனை செய்யப்படுகிற இந்த சேலில் கூடுதலாக10 சதவீதம் அதிக தள்ளுபடி தருவதாக ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது.
ரியல்மி 2 ப்ரோ, ரெட்மி நோட் 6 ப்ரோ, ஏஸுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம் 1, ஏஸுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2, ரியல்மி சி1 மற்றும் போகோ எஃப் 1 மற்றும் பல மாடல் போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கின்றன.
மேலும் பிளிப்கார்ட் சார்பாக வெளியாகியுள்ள தகவல்படி, (4ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட ரியல்மி 2 ப்ரோ போன்கள் ரூபாய் 11,990-க்கும் (6ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட மற்றொரு வகை ரூபாய் 14,990க்கும் இந்த சேலில் விற்பனை செய்யப்படுகின்றன.
ரெட்மி நோட் 6 ப்ரோ 4ஜிபி ரேம் மாடல் ரூபாய் 12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலின் மற்றொரு வகையான ரெட்மி நோட் 6 ப்ரோ 6 ஜிபி ரேம் போனுக்கும் தள்ளுபடி பெறலாம்.
ரியல்மி C1 (2ஜிபி மாடல்) போன் கடந்த நவம்பர் மாதம் ரூ.7,999 ஆக விலை ஏற்றப்பட்ட நிலையில் தற்போது தள்ளுபடி ஆஃபராக தனது அறிமுக விலையான ரூபாய் 6,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மைக்ரோமேக்ஸ், யூ ஏஸ் வகை ஸ்மோர்ட்போன் தனது அறிமுக விலையில் இருந்து குறைந்து 4,999-க்கு விற்பனை செய்யும்.
ஏசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்த சேலில் ரூபாய் 8,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில மாதத்திற்கு முன்னர் விலை குறைக்கப்பட்டு 9,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தள்ளுபடியால் மீண்டும் விலை சரிந்துள்ளது இந்த போன்.
அதே போனின் மற்ற ரேம் மற்றும் சேமிப்பு வசதிகொண்ட போன்களும் தள்ளுபடியும் பெற வாய்புள்ளது. இந்தியாவில் (3ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட ஏசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 இந்த பிளிப்கார்ட் போனான்சா சேலில், ரூபாய் 11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இப்படி பல போன்கள் தள்ளுபடி விலை விற்பனை செய்யபடும் நிலையில் விவோ வி9 ப்ரோ, மோட்ரோலா ஓன் பவர், ரெட்மி Y2, ரியல்மி 2 என்னும் பல வகையான போன்களுக்கு அதிரடி ஆஃபர் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்