ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் (Flipkart) தளம், ‘சூப்பர் வேல்யூ சேல்' விற்பனையை செய்ய உள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தொடரும் இந்த விற்பனையில் மொபைல் போன்களுக்கான முழு பாதுகாப்பை (Complete Mobile Protection Service) வெறும் 99 ரூபாய்க்குப் பெற முடியும். இந்த தள்ளுபடி விற்பனையின் போது மொபைல் போன்கள் வாங்குவோர்க்கு இந்த சிறப்பு பாதுகாப்பு ஆஃபர் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் வழங்கும் இந்த முழு பாதுகாப்பு திட்டம் மூலம் வாட்டர் டேமேஜ், ஸ்க்ரீன் டேமேஜ், பிராண்டு கண்காணிப்பிலான பழுது நீக்கம் உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படும். அதேபோல பழைய போன்களையும் இந்த அதிரடி விற்பனை மூலம் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள முடியும். 2019 ஆம் ஆண்டில், ஃப்ளிப்கார்ட் நடத்தும் இரண்டாவது சூப்பர் வீக் சேல் இதுவாகும்.
99 ரூபாய்க்கு போன்களுக்கு முழு பாதுகாப்பு தரும் திட்டத்தை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்த சேல் முலம் கொடுக்க உள்ளது. அதேபோல 10 நாட்களில் போன்களுக்கு பழுது நீக்கித் தரப்படும். 99 ரூபாய்க்கான போன் பாதுகாப்பு எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறித்து தகவல் இல்லை. ஏப்ரல் 23 ஆம் தேதிதான் இது குறித்து முழுத் தகவலும் தெரியவரும்.
ஃப்ளிப்கார்ட் மொபைல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ஸ்:
பழைய போன்களை கொடுத்துவிட்டு புதிய போன்கள் வாங்குவதற்கான வசதியும் இந்த சூப்பர் வீக் சேலில் இருக்கிறது. எக்ஸ்சேஞ்ச் போன்களுக்கான கண்டிஷன்களை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் நிர்ணயிக்கும். அதேபோல, எந்தெந்த போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கொடுக்கப்படும் என்பது குறித்தும் ஃப்ளிப்கார்ட் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியல் குறித்து தற்போதைக்கு எவ்வித தகவல்களும் இல்லை. வரும் நாட்களில் இது குறித்து தெளிவான தகவல்கள் கொடுக்கப்படலாம்.
ஃப்ளிப்கார்ட் தளம் சமீபத்தில்தான் ‘ஓஎம்ஜி டேஸ் சேல்' விற்பனையை நடத்தியது. அசுஸ் ஜென்போன் 5Z, அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M2, அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1, அசுஸ் ஜென்போன் லைட் L1 உள்ளிட்ட போன்களுக்கு இந்த சேலின் போது தள்ளுபடி அளிக்கப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்