இந்த மாத்தத்தில் நடைபெற உள்ள ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019ல் இடம்பெறவுள்ள சில போன்களின் விவரங்களை ஃப்ளிப்கார்ட் வெளியிட்டுள்ளது. இந்த விற்பனையானது, செப்.29ல் தொடங்கி அக்.4 வரை நடைபெற உள்ளது. இதில், மொபைல் விற்பனை செப்.30ல் தொடங்குகிறது.
இந்த தள்ளுபடி விற்பனையின் போது, ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவித்துள்ளது. இந்த பிக் பில்லியன் டேஸ் சேலில், சாம்சங் S9+, ரியல்மி 3 ப்ரோ, மோட்டோரோலா ஒன் விஷன், ரெட்மி நோட் 7s உள்ளிட்ட பல போன்களும் இடம்பெற்றுள்ளன.
இதில், மோட்டோரோலா ஒன் விஷன் போனின் விலை ரூ.5,000 குறைக்கப்பட்டு ரூ.14,999 விற்பனை செய்யப்பட உள்ளது. முன்னதாக, இந்த போனின் அறிமுக விலை ரூ.19,999 ஆக இருந்தது.
இந்த தள்ளுபடி விற்பனையில் ரெட்மி நோட் 7s ரூ.10,119 (4ஜிபி) இடம்பெற்றுள்ளது. எனினும், அதன் சரியான தள்ளுபடி விலை குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனையை ஃப்ளிப்கார்ட் வரும் செப்.30ல் தொடங்க உள்ளது.
இதேபோல், ஃப்ளிப்கார்ட் இணைதளம் செப்.20 முதல் தினமும் பிக் பில்லியன் டேஸில் இடம்பெற உள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தள்ளுபடி விலையுடன் அறிவிக்க உள்ளது.
இதில், ஆப்பிள், சியோமி, ரியல்மி, ஓப்போ, கூகுள், இன்பினிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இடம்பெற உள்ளன. இதில், இடம்பெற உள்ள ஒரு சில போன்களின் விவரங்கள், ரெட்மி நோட் 7 ப்ரோ, ரியல்மி 5, ஓப்போ F11 ப்ரோ, ரெட்மி 7A, ரியல்மி C2 உள்ளிட்ட பல போன்கள் இடம்பெற உள்ளன.
ஏற்கனவே கூறியதுபோல், இந்த விற்பனையில் ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் பயனாளர்கள் 4 மணி நேரம் முன்னதாகவே ஆர்டர் செய்யலாம். இந்த விற்பனையின்போது, பல்வேறு லோன் ஆப்ஷன்களையும் பயன்படுத்தும் வகையில், ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்