கொரோனா வைரஸ் காரணமாக ஐபோன் ஏற்றுமதி 10 சதவீதம் குறையக்கூடும்...!

கொரோனா வைரஸ் காரணமாக ஐபோன் ஏற்றுமதி 10 சதவீதம் குறையக்கூடும்...!

சமீபத்திய நாவல் கொரோனா வைரஸ் பாதிப்பு, ஆப்பிளின் விநியோகச் சங்கிலியை பாதிக்கும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த ஆய்வாளர் கூறுகிறார்

ஹைலைட்ஸ்
  • சீனாவில் 2020 நாவல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆப்பிள் தயாரிப்புகளை பாதிக்கும்
  • ஆப்பிளின் தயாரிப்புகள் பாதிக்கப்படும்: நன்கு அறியப்பட்ட ஆப்பிள் ஆய்வாளர்
  • ஆப்பிள் புதிய ஐபோன் மாடலை H1 2020-ல் அறிமுகம் செய்யக்கூடும்
விளம்பரம்

சமீபத்திய கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது சீனாவின் முக்கிய பகுதிகளுக்கான பயணங்களை நிறுத்துவது மட்டுமல்ல, இது உலகளாவிய நுகர்வோர் மின்னணுத் துறையையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இது நாட்டை பெரிதும் நம்பியுள்ளது. பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ (Ming-Chi Kuo) ஒரு புதிய ஆய்வுக் குறிப்பை வெளியிட்டுள்ளார். இது தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு, ஆப்பிளின் விநியோகச் சங்கிலியை பாதிக்கும். இது 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஐபோன் ஏற்றுமதிகளை நேரடியாக பாதிக்கும் என்று கணித்துள்ளது. நாவல் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராடுவதால், ஆப்பிள் சமீபத்தில் சீனாவில் தனது சில்லறை கடைகளை மூடியிருந்தது.

தனது சமீபத்திய ஆய்வுக் குறிப்பில், ஆப்பிள் இன்சைடர் பார்த்தபடி, சீனாவில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியை குறையும். இது Apple-ஐயும் 'பாதிக்கும்' என்று கூவோ (Kuo) கூறினார். சீனாவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் விநியோகச் சங்கிலி நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியையும் பாதிக்கும். கொரோனா வைரஸ் பாதித்ததால், ஆப்பிள் தயாரிப்புகள், உற்பத்தி அபாயங்களை எதிர்கொள்ளும். ஏனெனில், சில தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்.

குவோவின் (Kuo) சமீபத்திய ஆய்வுக் குறிப்பு, சீன சந்தையில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 2020-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 15 சதவீதம் குறைந்து 310 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறது. சீனாவில் நடந்து வரும் coronavirus பாதிப்பு காரணமாக 'நுகர்வோர் நம்பிக்கையில் எதிர்மறையான தாக்கங்கள்' இருப்பதாக ஆய்வாளர் குற்றம் சாட்டுகிறார். 

கூடுதலாக, குவோ (Kuo) மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் iPhone's சப்ளை பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக 2020 முதல் காலாண்டில் ஐபோன் ஏற்றுமதி கணிப்புகள் 10 சதவீதம் வரை குறைகிறது.

பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், தயாரிப்புகள் மற்றும் பிற செயல்பாடுகள் தொடர்பான சிக்கல்களைச் சோதிப்பதற்காக ஆப்பிள் ஊழியர்கள் சீனாவில் சப்ளையர்களைப் பார்க்க முடியாது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் வேலையில் இருக்கக்கூடிய தயாரிப்புகளை தாமதப்படுத்தலாம்.

ஆப்பிள் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை சீனாவில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் சில்லறை கடைகளையும் மூடியுள்ளது. ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கான், நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்த போதிலும், அதன் அனைத்து உற்பத்தி கடமைகளையும் பூர்த்தி செய்வதில் தொடர்ந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக உறுதியளித்தது. ஆப்பிள் ஒரே நிறுவனமாக இருக்காது, கொரோனா வைரஸ் பாதித்ததால், பல சீன போன் பிராண்டுகளும் பாதிக்கப்படும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Coronavirus, Apple, Ming Chi Kuo
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »