கொரோனா வைரஸ் எதிரொலி: மார்ச் 31 வெளியீட்டு நிகழ்வை ரத்து செய்தது ஆப்பிள்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 11 மார்ச் 2020 16:09 IST
ஹைலைட்ஸ்
  • மார்ச் 31 வெளியீட்டு நிகழ்வை ஆப்பிள் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது
  • ஆப்பிள், iPhone SE 2-வை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது
  • ஆப்பிளின் பயணக் கட்டுப்பாடுகள் ஐபோன் 12-ன் வளர்ச்சியை பாதித்துள்ளன

நடப்பு காலாண்டில் அதன் வருவாய் அதன் கணிப்புகளுக்குக் கீழே இருக்கும் என்று ஆப்பிள் பிப்ரவரியில் கூறியது

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதித்ததால் குபெர்டினோவை (Cupertino) தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், மார்ச் 31 வெளியீட்டு நிகழ்வை ரத்து செய்துள்ளதாக கிஸ்மோசீனா (GizmoChina) புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்பிள், புதிய தலைமுறை ஐபாட் புரோ உள்ளிட்ட சில சாதனங்களுடன். iPhone SE 2 aka iPhone 9-ஐ இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சாண்டா கிளாரா கவுண்டி (Santa Clara County) மக்கள் கூட்டத்தை தற்காலிகமாக தடை செய்துள்ளதால், ஐபோன் தயாரிப்பாளரிடமிருந்து நிகழ்வை ரத்து செய்வதற்கான முடிவு வந்துள்ளது.

கூடுதலாக, கொரோனா வைரஸ் காரணமாக Apple அதன் பொறியியலாளர்களுக்கு, ஆசியாவிற்கு செல்வதற்கான கட்டுப்பாடுகள் அதன் அடுத்த தலைமுறை iPhone 12-ன் வளர்ச்சியை பாதித்துள்ளது, இதனால் வெளியீடு தாமதமாக தொடங்கப்படலாம்.

குபேர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம், அதன் பொறியியலாளர்கள் ஆசியாவிற்கு வணிகப் பயணங்களை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை ஏப்ரல் இறுதி வரை ஒரு மாதம் நீட்டித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் சீனாவில் உற்பத்தி வசதிகளில் 5ஜி ஐபோன்களுக்கான பொறியியல் சரிபார்ப்பு சோதனைகளை (EVTs) தாமதப்படுத்தியுள்ளன.

நடப்பு காலாண்டில் அதன் வருவாய் அதன் கணிப்புகளுக்குக் குறைவாக இருக்கும் என்றும் COVID-19 தொற்றுநோயின் விளைவுகள் காரணமாக உலகளாவிய ஐபோன் விநியோகம் "தற்காலிகமாக தடைசெய்யப்படும்" என்றும் ஆப்பிள் பிப்ரவரியில் கூறியது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, COVID 19, Coronavirus
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  2. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  3. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
  4. அறிமுகத்திற்கு முன் கசிந்தது விவோ S2 விலை, முழு விவரங்கள் மற்றும் வடிவமைப்பு!
  5. கூகிள் இந்தியாவில் 'ஆஸ்க் கூகிள் பே' என்ற ஜெமினி AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  6. Paytm தனது செயலியில் பகிரப்பட்ட குழுச் செலவுகளுக்காக பில்களைப் பிரிக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
  7. ஜெமினியால் இப்போது கூகிள் டாக்ஸில் உள்ள கருத்துகளைப் படிக்கவும்,சுருக்கவும்,பதில்களை வரைவு செய்யவும் முடியும்
  8. சாம்சங் கேலக்ஸி S26 FE போனின் சார்ஜிங் வேகத்தில் மாற்றம் இருக்காது என சான்றிதழ் தளம் மூலம் தெரியவந்துள்ளது!
  9. வாட்ஸ்அப் வெப்பில் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்; குவிக்HD, சத்தம் குறைப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  10. விவோ T5x 5G ஃபியூஷன் ரெட் வண்ண மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.