சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான பிளாக் ஷார்க் தனது அடுத்த ஜென் கேமிங் போனுடன் மீண்டும் சந்தைக்கு வருகிறது, மார்ச் 3 அன்று சீனாவில் நடைபெறும் ஒரு நிகழ்வில் பிளாக் ஷார்க் 3-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. சமீபத்திய கேமிங் ஃபிளாக்ஷிப்பை டென்சென்ட் பிளாக் ஷார்க் 3 என்று அழைக்கிறது PUBG மொபைல் போன்ற கேம்களை உருவாக்குவதற்கு பிரபலமான டென்சென்ட் கேம்களுடன் கூட்டுவைத்துள்ளது. இந்தியாவில் இந்த போன் எப்போது அறிமுகம் செய்யப்படும், எவ்வளவு விலை என்பது இன்னும் தெரியவில்லை.
இது 5G-ஐ ஆதரிக்கும் நிறுவனத்தின் முதல் கேமிங் போனாகும் என்று டீஸர் வெளிப்படுத்தியுள்ளது. 5ஜி ஆதரவைத் தவிர, போனின் அம்சங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், கசிவுகள் மற்றும் சான்றிதழ் வலைத்தளத்தைப் பார்ப்பதற்கு நன்றி, ஸ்மார்ட்போனிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து எங்களுக்கு சில யோசனைகள் உள்ளன.
கடந்த வாரம், பிளாக் ஷார்க் 3 போனின் 3C சான்றிதழ் ஆன்லைனில் காணப்பட்டது, அதன் ஸ்கிரீன் ஷாட் ஸ்லாஷ்லீக்ஸில் பகிரப்பட்டது. இந்த ஸ்கிரீன்ஷாட்,போனின் மாதிரி எண்களான Shark MBU-A0 மற்றும் Shark KLE-A0 உடன் வரும் என்று பரிந்துரைத்தது. 3C பட்டியல், இந்த போன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பிளாக் ஷார்க் தலைமை நிர்வாக அதிகாரி லூயோ யுஜோ (Luo Yuzhou) சமீபத்தில் வெய்போவை கேலி செய்ததற்கு இது பொருந்தும்.
இது தவிர, டென்சென்ட் பிளாக் ஷார்க் 3, 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என்றும், பயனர்கள் 60Hz மற்றும் 90Hz இடையே மாற ஆப்ஷன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த போன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படும் என்றும் Android 10 ஓஎஸ்-ல் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, கேமராக்கள், ரேம் மற்றும் போனின் வடிவமைபப்பு போன்ற பிற முக்கிய விவரக்குறிப்புகள் இன்னும் தெரியவில்லை.
பிளாக் ஷார்க் மார்ச் 2019-ல் இந்திய மொபைல் சந்தையில் நுழைந்தது. பிளாக் ஷார்க் 2 இரண்டு வேரியண்டுகளின் விலை முறையே ரூ.29,999 மற்றும் ரூ.39,999-க்கு விற்பனைக்கு வந்தது. இரண்டு வேரியண்டுகளின் ரேம் மற்றும் மெமரி திறன் ஆகியவற்றில் உள்ள வேறுபாட்டைத் தவிர, Xiaomi ஆதரவு கேமிங் போன் இதேபோன்ற 6.39 அங்குல டிஸ்ப்ளேவுடன் வந்தது, மேலும் 20 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்