இன்று இந்தியாவில் அறிமுகமானது, சியோமி 'ப்ளாக் ஷார்க் 2'. இதன் அறிமுக நிகழ்வு மே 27-ஆம் தேதியான இன்று புதுடெல்லியில் மதியம் 1 மணிக்கு நடைபெற்றது. ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில் லிக்விட் கூல் (Liquid Cool) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. கேமிங்கிற்காகவே பிரத்யேகமாகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்பொனின் ஃப்ளிப்கார்ட் ஆரம்ப விலை ரூபாய் 39,999.
சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': விலை
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. அதில் ஒரு வகையான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' 39,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது. இதன் மற்ற வகைகளான 12GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' விலை 49,999 ரூபாய். இந்த சியோமி 'ப்ளாக் ஷார்க் 2' ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 4-ஆம் தேதியன்று விற்பனைக்கு வரவுள்ளது.
சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': சிறப்பம்சங்கள்
இரண்டு நானோ-சிம் வசதிகளை கொண்ட இந்த 'ப்ளாக் ஷார்க் 2' 6.39-இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் மற்றும் 403ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் லிக்விட் கூல் (Liquid Cool) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால், மற்ற ஸ்மார்ட்போன்களை விட, இதில் வெப்பத்தை வெளிக்கடத்தும் திறன் 20 மடங்கு வரை அதிகமாக இருக்கும்.
கேமரா பற்றி பேசுகையில், இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த 'ப்ளாக் ஷார்க் 2'. 48 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த கேமராக்கள். அதில் 12 மெகாப்க்சல் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் வசதி கொண்டுள்ளது. மேலும், 20 மெகாபிக்சல் அளவிலான முன்புற செல்பி கேமராவை கொண்டுள்ளது.
4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் டை-C சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
Is ROG Phone the best gaming smartphone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்