அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 ஸ்மார்ட் போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன்களின் அனைத்து வகைகளும் விலை குறைப்பைப் பெற்றுள்ளன. அது குறித்து விவரங்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 1,500 ரூபாய் வரை அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 போன் வகைகளின் விலை குறைந்துள்ளது. இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் ஸ்மார்ட் போன் பிரிவில், அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த போனில், ஸ்னாப்டிராகன் 636 எஸ்.ஓ.சி, 5000 எம்.ஏ.எச் பேட்டரி, 6ஜிபி ரேம், 3.5 எம்.எம் ஜாக், டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.
அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, விலை குறைக்கப்பட்டு 7,999 ரூபாய்க்குக் கிடைக்கும். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 8,999 ரூபாய்க்குக் கிடைக்கும். அதேபோல 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வசதி மாடல் 11,999 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த 3 வகைகளின் விலைகள் முறையே ரூ.8499, ரூ.10,499 மற்றும் 12,499 என்று இருந்தன. தற்போது 3ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் வகைகளுக்கு 500 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி வகைக்கு 1,500 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட்டில் இந்த மாற்றம் செய்யப்பட்ட விலையில் அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 கிடைக்கும். ஆக்ஸிஸ் கிரெடிட் அல்லது ஆக்ஸிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் 5 சதவிகித கேஷ்-பேக் தரப்படும். நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனும் இருக்கிறது. கருப்பு, நீலம் மற்றும் க்ரே வண்ணங்களில் இந்த போனை வாங்க முடியும்.
அசூஸ் ஜென்போன் மேக்ஸ் M1 சிறப்பம்சங்கள்:
அசூஸ் ஜென்போன் மேக்ஸ் M1, டூயல் நானோ சிம் ஸ்லாட் வசதியுடன் 5.99 இன்ச் முழு எச்.டி ஸ்க்ரீன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ வசதிகளைப் பெற்றுள்ளது. குவாட்கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 மூலம் பவரூட்டப்பட்டுள்ள இந்த போன் 6 ஜிபி ரேம் வசதியுடன் இயங்குகிறது. 64 ஜிபி உள் சேமிப்பு வசதியைப் பெற்றுள்ள இந்த போனின் சேமிப்பு வசதியை 2டிபி வரை உயர்த்த முடியும்.
3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வகைகள் கொண்ட போன், 13 மெகா பிக்சல் கொண்ட முதன்மை ரியர் கேமராவைப் பெற்றுள்ளது. 5 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை கேமராவையும் இந்த போன் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், 6ஜிபி ரேம் வசதி கொண்ட போன், 16 மெகா பிக்சல் முதன்மை கேமராவைப் பெற்றுள்ளது.
16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் இந்த போன் கொண்டிருக்கிறது. இவைத் தவிர 5,000 எம்.ஏ.எச் பேட்டரி வசதி, இந்த போனின் மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்