புதிதாக வந்துள்ள இந்த சாப்ட்வேர் அப்டேட், அசுஸ் ஜென்போன் 5Z-விற்கு ஏப்ரல் மாத அண்ட்ராய்ட் பாதுகாப்பு இணைப்பை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய அப்டேட் ஒலியின் தரத்தை மேம்படுத்தியும் முன்னதாக இருந்த துவக்க வேகத்தை அதிகரித்தவாரும் அமைக்கப் பெற்றுள்ளது. இந்த சாப்ட்வேர் அப்டேட், இந்தியாவிலுள்ள அசுஸ் ஜென்போன் 5Z ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 6GB RAM + 64GB சேமிப்பு வசதி கொண்ட ஜென்போன் 5Z, தற்போது இந்தியாவில் ரூபாய் 24,999-க்கு கிடைக்கப் பெருகிறது. இந்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 845 அமைப்பு, இரண்டு பின்புற கேமரா(12MP + 8MP), 3,300mAh பேட்டரி மற்றும் 6.2-இன்ச் திரை என்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த புதிய சாப்ட்வேர் அப்டேட் இந்தியாவில் அசுஸ் ஜென்போன் 5Z ஸ்மார்ட்போனை உபயோக்கிபவர்களுக்கு ஏப்ரல் மாத அண்ட்ராய்ட் பாதுகாப்பு இணைப்பு கிடைக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த சாப்ட்வேர் அப்டேட் ஒவ்வொரு கட்டமாகத்தான் ஜென்போன் 5Z ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்களுக்கு சென்றடையும் என்பதால், அனைத்து ஜென்போன் 5Z உபயோகிப்பாளர்களும் இந்த அப்டேடிற்காக சற்று காத்திருக்க வேண்டியிருக்கும். தங்களுக்கு இந்த அப்டேட் கிடைத்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள, மொபைல்போனில் Settings > About > System Update இந்த வழியை பின்பற்றி உள்ளே சென்று தெரிந்துகொள்ளலாம். இந்த சாப்ட்வேர் அப்டேட்டை நீங்கள் டவுன்லோடு செய்யும் பொழுது உங்கள் மொபைல்போனில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் பேட்டரி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், சார்ஜ் செய்தவாரே, அப்டேட்டை துவங்குங்கள். மற்றும் நீங்கள் அப்டேட் செய்யும் பொழுது, உங்கள் மொபைல்போனை ஏதாவது ஒரு வை-பை மூலம் இணைத்து அப்டேட்டை துவங்குங்கள். மேலும் இந்த அப்டேட்டின் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனின் ஒலித்தரம் மேம்படுவதுடன், இயக்க வேகமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், சமீபமாக அசுஸ் ஜென்போன் 5Z-ஐ சேர்ந்த அனைத்து வகை போன்களின் விலையையும் குறைத்துள்ளது அந்த நிறுவனம். இதன்படி 6GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஜென்போன் 5Z-யின் தற்போதைய விலை ரூபாய் 24,999. துவக்கத்தில் ரூபாய் 32,999-க்கு விற்கப்பட்ட 6GB RAM + 64GB ஜென்போன் 5Z தற்போது ரூபாய் 27,999-க்கு விற்கப்படுகிறது. அதே நேரம் ரூபாய் 36,999 ஆக இருந்த 8GB RAM + 256GB ஜென்போன் 5Z ரூபாய் 31,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டது.
இரண்டு சிம்கள் கொண்ட அசுஸ் ஜென்போன் 5Z, 6.2-இன்ச் FHD திரை, 18.7:9 என்ற திரை விகிதத்தையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 845 ஒருகிணைக்கப்பட்ட அமைப்பை கொண்டு செயல்படுகிறது. பின்புறத்தில் 12MP + 8MP என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் அந்த 8MP கேமரா 120டிகிரி ஆங்கிள் வரை விரிவடைந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது. முன்புறத்தில் 8MP செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 3300mAh பேட்டரி, அதிவேக 3.0 சார்ஜ் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்