ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அசுஸ் OMG சேல் என்கின்ற பிரத்யேக விற்பனை மூலம் அசுஸ் நிறுவன போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அசுஸ் ஜென்போன் 5Z, அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M2, அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1, அசுஸ் ஜென்போன் லைட் L1 உள்ளிட்ட போன்களுக்கும் இந்த சிறப்பு விற்பனை மூலம் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடங்கியுள்ள இந்த விற்பனை, ஃப்ளிப்கார்ட் தளத்தில் வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறும். தள்ளுபடி ஆஃபர்களுடன், நோ- காஸ்ட் இ.எம்.ஐ திட்டங்கள், சிறப்பு காப்பீடுத் திட்டங்களையும் பெற முடியும்.
மிகவும் விலை உயர்ந்த அசுஸ் ஜென்போன் 5Z போன்களின் மூன்று வகைகளும் சுமார் 3,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு கிடைக்கும். கடந்த மாதம் செய்யப்பட்ட விலைக் குறைப்பைக் கழித்த பின்னர் இந்த தள்ளுபடி கொடுக்கப்படும். 6ஜிபி + 64ஜிபி வகை அசுஸ் ஜென்போன் 5Z 21,999 ரூபாய்க்கு கிடைக்கும். அதேபோல 6ஜிபி + 128 ஜிபி 24,999 ரூபாய்க்கு கிடைக்கும். 8ஜிபி + 256 ஜிபி வகை 28,999 ரூபாய்க்கு கிடைக்கும்.
அசுஸ் ஜென்போன் மேக்ஸ்ப் ப்ரோ M1 போனின் அடிப்படை வகை, தள்ளுபடி பெற்ற பின்னர் 7,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 3ஜிபி + 32ஜிபி வகைக்கு இந்த விலையாகும். 4ஜிபி + 64ஜிபி வகை 9,999 ரூபாய்க்கும், 6ஜிபி + 64ஜிபி வகை 11,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.
அசுஸ் ஜென்போன் லைட் L1 போன், 1000 ரூபாய் விலை குறைந்து 4,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதேபோல அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1 போன், 6499 ரூபாய்க்கு வாங்க முடியும்.
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M2 போனின் 3ஜிபி+32ஜிபி வகை 7,999 ரூபாய்க்கும், 4ஜிபி+64ஜிபி வகை 9,999 ரூபாய்க்கும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்