இன்று விற்பனைக்கு வரவுள்ள ஆசுஸ் 6Z-ன் 128GB, 256GB வகைகள்: விவரங்கள் உள்ளே!

இன்று விற்பனைக்கு வரவுள்ள ஆசுஸ் 6Z-ன் 128GB, 256GB வகைகள்: விவரங்கள் உள்ளே!

ஆசுஸ் 6Z சென்ற மாதம் இந்தியாவில் அறிமுகமானது

ஹைலைட்ஸ்
  • 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் 6Z-ன் விலை 34,999 ரூபாய்
  • 8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் 6Z-ன் விலை 39,999 ரூபாய்
  • இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
விளம்பரம்

கடந்த மாதம் ஆசுஸ் நிறுவனம், தன் ஸ்மார்ட்போனான ஆசுஸ் 6Z-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும், அந்த ஸ்மார்ட்போனில் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட வகையை சென்ற வாரம் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கும் வைத்தது. மொத்தம் மூன்று வகைகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் ஒரு வகை முன்பு விற்பனையான நிலையில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட மற்ற இரு வகைகள் இன்று விற்பனையாகவுள்ளது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் நடக்கவுள்ள இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. ஃப்ளிப் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

ஆசுஸ் 6Z: விலை!

ஆசுஸ் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. அதில் இன்று விற்பனையாகவுள்ள 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் 6Z 34,999 ரூபாய் என்ற விலையிலும், 8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் 6Z 39,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு(Midnight Black) மற்றும் சில்வர்(Twilight Silver) ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும்.

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள், ஃப்ளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.மேலும், தன் தளத்தில் ஆக்சிஸ் வங்கி பஸ் கிராடிட் கார்டு மூலம், இந்த ஸ்மார்டபோனை பெற்றால் 5 சதவிகித தள்ளுபடியும் வழங்கவுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.

ஆசுஸ் 6Z: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த 6Z, அண்ட்ராய்ட் பை (Android Pie) அமைப்பு கொண்டது. ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் செயல்படவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரைவிகிதம் மற்றும் 600நிட்ஸ் அளவிலான ஒளிர்வு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் திரையின், திரை மற்றும் ஸ்மார்ட்போனின் உடலுக்கு உள்ள விகிதம் 92சதவிகிதமாக உள்ளது. இதில், முன்புறத்திக் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படாததால் இந்த அளவிலான திரையை கொண்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப் கேமரா பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளதால், பின்புற கெமராக்களை கொண்டே செல்பி எடுத்துக்கொள்ளலாம்.  பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், 48 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என்ற அளவிலான இரண்டு கேமராக்கள். மேலும், இதில் 13 மேகாபிக்சல் கேமரா, அதி வைட் ஆங்கிள் கேமராவாக பொருத்தப்பட்டுள்ளது.

5,000mAh அளவிலான, மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குயிக் சார்ஜ் 4.0 வசதியை கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.  ப்ளூடூத் v5, வை-பை மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 159.1x75.11x8.1-9.1mm என்ற அளவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 190 கிராம் எடை கொண்டுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • High quality notchless screen
  • Excellent performance
  • Useful software features
  • Good quality selfies
  • Bad
  • Disappointing low light camera performance
  • Face recognition is slow
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 855
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Asus 6Z, Asus 6Z Price in India, Asus 6Z Specifications, Asus, Flipkart
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »