ஆப்பிள்-க்கு சாம்ஸங் கொடுத்த இழப்பீடு… முடிவக்கு வந்த 7 ஆண்டு பிரச்னை!

விளம்பரம்
Written by Agence France-Presse மேம்படுத்தப்பட்டது: 28 ஜூன் 2018 13:20 IST
ஹைலைட்ஸ்
  • 7 ஆண்டுகளுக்கு முன்னர் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது
  • இந்த வழக்கில் சாம்ஸங் நிறுவனத்துக்கு எதிராக தீர்ப்பு வந்தது
  • சாம்ஸங், ஆப்பிள்-க்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தது எனத் தகவல் இல்லை

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-போனிலிருந்த டிசைன்களை அப்படியே நகல் செய்ததாகக் கூறி சாம்ஸங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக நடந்த வந்த நிலையில் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய தயாரிப்பான ஐ-போனின் டிசைன்களை சாம்ஸங் காப்பியடித்ததாக கூறி, ஆப்பிள் நிறுவனம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்ற மாதம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ‘சாம்ஸங் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் டிசைனை நகல் செய்ததற்காக 3,700 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும். இழப்பீடு கொடுத்தலுக்குப் பிறகு, இது தொடர்பாக இரு நிறுவனங்களும் தொடுத்துள்ள மற்ற வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்’ என்று உத்தரவிட்டது. 

இதையடுத்து, சாம்ஸங் நிறுவனம், ஆப்பிளுக்கு இழப்பீடு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவும் பணம் கைமாறியது என்பது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. 

இது குறித்து ஆப்பிள் நிறுவனம், ‘இந்த வழக்கு என்பது பணத்தை குறிவைத்து நடத்தப்பட்டதில்லை. இதை நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். ஆப்பிள் நிறுவனத்தில் கடும் உழைப்பைச் செலுத்தி டிசைன்களை உருவாக்கும் ஊழியர்களின் உழைப்பை நாங்கள் காக்க வேண்டும் என்று நினைத்தோம்’ என்று மட்டுமே கூறியது. எவ்வளவு இழப்பீடு கொடுக்கப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கவில்லை. 

சாம்ஸங் நிறுவனம், இந்த விவகாரம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது. மொபைல் தயாரிப்பில் உலக அளவில் முண்ணனியில் இருக்கும் இரண்டு நிறுவனங்களுக்கு மத்தியில் நடந்த இந்த வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்துக்கு, சாம்ஸங் இழப்பீடு கொடுத்தது அந்நிறுவனத்துக்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, Samsung, US, US Court
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iOS 27-ல் ஆப்பிளின் புதிய 'சிரி' (Siri) செயலி: குரல் மற்றும் உரை முறைகளோடு, பிற நிறுவனங்களின் சாட்பாட்களுக்கான 'எக்ஸ்டென்ஷன்' வசதியையும் வழங்குகிறது
  2. ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என மார்க் குர்மன் தகவல்
  3. முதன்முறையாக ஒரு வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை மாற்றுவதை படம் பிடித்த ஹப்பிள் தொலைநோக்கி
  4. கட்டுரைகளில் ஏஐ உருவாக்கிய உரைகளுக்கு விக்கிப்பீடியா தடை; ஆனால் இரண்டு விலக்குகளை அளித்துள்ளது
  5. ஓப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா: 10x டெலிஃபோட்டோ கேமரா மற்றும் மேம்பட்ட ஸ்டெபிலைசேஷன் வசதி உறுதி
  6. ஒன்பிளஸ் நோர்டு CE 6, நோர்டு CE 6 லைட் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு; சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு
  7. விண்டோஸிற்கான சாம்சங் பிரவுசர் அறிமுகம்: ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) வசதிகள் மற்றும் சாதனங்களுக்கு இடையேயான இணைப்பு
  8. கூகுள் அப்டேட்: வேகமான பதில்களுடன் 'ஜெமினி லைவ்' மேம்பாடு; 'சர்ச் லைவ்' உலகளவில் விரிவுபடுத்தப்பட்டது
  9. ஐபோன் 18 ப்ரோ மாடல்களை விட தாமதமாகவே வெளியாகும் 'ஐபோன் ஃபோல்ட்': மார்க் குர்மன் தகவல்
  10. ஜெமினி, கிளாட் போன்ற பிற ஏஐ உதவியாளர்களையும் இனி 'சிறி' ஆதரிக்கும்: ஐஓஎஸ் 27-ல் அதிரடி மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.