உங்களிடம் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் நிறைந்துள்ளதா? ஆம் என்றால், அனைத்தையும் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம், அனைத்து சாதனங்களுக்கும் அப்டேட்களை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கு iOS 12.3, ஸ்ட்ரீமிங் சாதனங்களுக்கு tvOS 12.3, ஸ்மார்ட்வாட்ச்களுக்கு watchOS 5.2.1 மற்றும் லேப்டாப்கள் மற்றும் கணினிகளுக்கென macOS 10.14.5 என்று ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து விதமான சாதனங்களுக்கும் ஒரே நேரத்தில் அப்டேட்டை அள்ளி தெளித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். மேலும் iOS 12.3 மற்றும் tvOS 12.3 ஆகிய அப்டேட்கள், சீரமைக்கப்பட்ட ஆப்பிள் டிவி செயலியையும் இந்த சாதனங்களுக்கு திரும்ப கொண்டுவந்துள்ளது. இந்த ஆப்பிள் டிவி செயலி ஐபோன், ஐபாட், ஆப்பிள் டிவி மற்றும் சில சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இந்த அப்டேட்களை எப்படி டவுன்லோட் செய்வது?
iOS 12.3 அப்டேட்
iOS 12.3 அப்டேட்-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்ய, முதலில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ்-குள் சென்று பின் வரும் வழியை பின்பற்ற வேண்டும். Settings > General > Software Update. பின் அங்கு அளிக்கப்பட்டுள்ள அப்டேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அப்டேட்டின் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில், ஏர்ப்ளே 2-வுடன் கூடிய ஆப்பிள் டிவி செயலி, மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் மியூசிக், கார்ப்ளே மட்டும் ஆப்பிள் டிவி ரிமோட் செயலிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வை-பை காலிங் வசதியும் உங்களுக்கு கிடைக்கும்.
tvOS 12.3 அப்டேட்
இந்த அப்டேட்-ஐ தங்களுடைய, ஆப்பிள் டிவி 4K மற்றும் ஆப்பிள் டிவி HD ஆகிய சாதனங்களில் பெற, முதலில் தொலைக்காட்சிகளை ஆன் செய்து, பின் பின்வரும் வழியை பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும். Settings > System > Software Updates இந்த வழியை பயன்படுத்தி உள்ளே சென்ற பின் அங்கு இந்த அப்டேட்-ஐ பதிவிறக்கம் செய்ய வழி இருக்கும். Update Software > Download and Install இந்த வழியை பயன்படுத்தி நீங்கள் இந்த புதிய அப்டேட்-ஐ பெற்றுக்கொள்ளலாம். மேலும் மூன்றாம் தலைமுறை ஆப்பிள் டிவிக்களிலும் இதே வழியை பயன்படுத்தி இந்த அப்டேட்-ஐ பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அப்டேட்-ன் மூலம் நீங்கள் உங்கள் டிவியில் ஆப்பிள் டிவி செயலி மூலம், படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை 4K HDR தரத்தில் காணலாம்.
watchOS 5.2.1
உங்கள் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான அப்டேட்களை பெற நீங்கள் செய்ய வேண்டியவை இதுதான். முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்பிள் வாட்ச் செயலியினுள் செல்ல வேண்டும். பின்னர் பின்வரும் வழியை பயன்படுத்தி இந்த அப்டேட்டை பெற்றுக்கொள்ளலாம். அந்த செயலியில் General > Software Update இவ்வாரு சென்று, இந்த புதிய அப்டேட்-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்கள் இதயம் சீராக துடிக்கவில்லை என்றால், அறிவிப்பு தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்டேட்-ஐ பதிவிறக்கம் செய்ய், குறைந்தது 50 சதவித சார்ஜ் ஆவது உங்கள் ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்க வேண்டும்.
macOS 10.14.5
பல புதிய சிறப்பம்சங்களை இந்த macOS 10.14.5 உங்கள் கணினி மற்றும் லேப்டாப்களில் கொண்டுவர உள்ளது. அவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ள இந்த macOS 10.14.5-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த macOS 10.14.5-ஐ, உங்கள் கணினி அல்லது லேப்டாபில் இருந்து நேரடியாக மேக் ஆப் ஸ்டோர்(Mac App Store)-குள் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த macOS அப்டேட்டின் மூலம் உங்கள் சாதனங்களுக்கு சில செக்கியூரிடி அப்டேட்களும் கிடைக்கவுள்ளது.
இது மட்டுமின்றி HomePod OS 12.3 என்ற அப்டேட் ஒன்றையும் அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதை உங்கள் iOS சாதனங்களில் பதிவிறக்கம் செய்ய, iOS சாதனங்களில் உள்ள ஹோம் ஆப்பிற்குள் சென்று, Home Settings > Software Update > Install என்ற வழியை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம். லேப்டாப் மற்றும் கணினிகளில், ஹோம் ஆப்பிற்குள் சென்று Edit > Edit Home > Software Update > Install இந்த வழியை பின்பற்றி அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த ஹோம்பாட், உங்கள் சாதனங்களில் ஏதாவது புதிய அப்டேட் கிடைக்கப்பெற்றால், தானாகவே தேடி அப்டேட் செய்துகொள்ள உதவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்