சியோமியின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கிறீர்களா, இன்னும் குறைந்த விலையில் வாங்க இதுவே சரியான தருனம். சியோமி ஸ்மார்ட்போன்களின் சலுகை விலை விற்பனைக்கான 'Mi டேஸ் சேல்' விற்பனை நாட்களை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின்படி, 'Mi டேஸ் சேல்' ஜூன் 17-ல் துவங்கி ஜூன் 21 வரை நடைபெறும். இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு 6,500 ரூபாய் வரை தள்ளுபடிகளையும், 4,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்கியுள்ளது அமேசான் நிறுவனம். குறிப்பிடத்தக்கதாக, Mi A2, ரெட்மீ Y2, ரெட்மீ நோட் 5 Pro, மற்றும் ரெட்மீ 6 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் அதிக சலுகைகளை பெற்றுள்ளது. இந்த விற்பனையில் சலுகைகளை பெற்றுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியல், அதன் சலுகை விலையுடன் இதோ!
அதிக சலுகையை பெற்றிருக்கும் முதல் Mi ஸ்மார்டபோன் Mi A2-தான். 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு வகை கொண்டு 16,999 ரூபாய்க்கு அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், தற்போது அமேசான் தளத்தில் 10,990 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. இந்த விற்பனையில் 19,999 ரூபாயிலான 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு Mi A2 ஸ்மார்ட்போனின் விலை 15,999 ரூபாய் மட்டுமே.
இந்த விற்பனையில், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்ட ரெட்மீ Y2 ஸ்மார்ட்போனின் அடிப்படை வகையின் விலை 7,999 ரூபாய். அதே சமயம், 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட ரெட்மீ Y2-வின் விலை 9,720 ரூபாய். இந்த ஸ்மார்ட்போனை 9,999 ரூபாய் என்ற விலையில் Mi ஆன்லைன் தளத்தில் பெறலாம்.
இந்த விற்பனையில் கவணிக்கப்பட வேண்டிய மற்ற ஸ்மார்ட்போன்கள், 10,999 ரூபாயில் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ரெட்மீ நோட் 5 Pro, 8,999 ரூபாய் மற்றும் 9,999 ரூபாய் ஆகிய விலையில் விற்பனியாகிக்கொண்டிருக்கும் 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு மற்றும் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு வகை ரெட்மீ 6 Pro ஸ்மார்ட்போன்கள், மற்றும் ரெட்மீ 6, ரெட்மீ 6A மற்றும் ரெட்மீ 5 ஆகிய ஸ்மார்ட்போன்கள்.
மேலும் இந்த விற்பனையில், ஆக்சில் வங்கி கிரடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைக்களுக்கு 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடியையும் வழங்கியுள்ளது அமேசான் நிறுவனம். கடந்த ஜூன் 17ஆம் தேதியே துவங்கிய இந்த விற்பனை ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்