அமேசான், ஆப்பிள் புக்ஸ் மற்றும் கூகுள் பிளே புக்ஸ் போன்ற தயாரிப்புகளுடன் போட்டியிடுவதை விரும்பாத மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது இ-புத்தக சேவையை மைக்ரோசாஃப்ட் ஸ்ரோரிலுர்ந்து நீக்கியுள்ளது.
இனி இந்த தயாரிப்பின் வாடிக்கையாளர்கள் புத்தகங்களை வாடகைக்கோ, முன்பதிவு செய்து இணையத்தில் படிக்கவோ முடியாது.
'ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் இந்த சேவை நிறுத்தப்படுகிறது. இதனால் வரும் ஜூலை 2019 முதல் ஏற்கெனவே இருக்கும் இ-புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்படும்' என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய மாற்றத்தால் புத்தகங்களை வாடகைக்கு எடுத்தவர்கள் அதை வாடகை முடியும் தேதிக்குள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் புத்தகங்களை ஏற்கெனவே ஆர்டர் செய்தவர்களின் ஆர்டர்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக செலுத்தப்பட்ட பணமும் உடனடியாக திரும்பி கொடுக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் கசிந்துள்ளது.
இந்த ரீஃபன்ட் சேவை வரும் ஜூலை முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்