மே 13-ல் புதிய அறிவிப்பு:போன்களுடன், லேப்டாப்பையும் அறிமுகப்படுத்தும் ரெட்மீ நிறுவனம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 11 மே 2019 17:14 IST
ஹைலைட்ஸ்
  • ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து லேப்டாப் ஒன்றையும் வெளியிடவுள்ள ரெட்மீ
  • ரெட்மீ என்ற பெயரிலேயே வெளியிடலாம்
  • சியோமியால் வெளியிடப்படும் எம் ஐ நோட்புக்-ஐ விட விலை குறைவாக இருக்கும்

புதிய லேப்டாப்களை அறிமுகப்படுத்தும் பணியில் ரெட்மீ நிறுவனம்


சியோமியின் துணை நிறுவனமான ரெட்மீ, இந்த மாதத்தில் சீனாவில், புதிய ஸ்மார்ட்போன் ஒன்ற வெளியிடும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒன்று அல்ல, இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்த நிறுவனம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

தற்போது புதிதாக வெளியான ஒரு தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து மற்றொரு தயாரிப்பையும் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸ்ர், 48 மேகாபிக்சலுடன் வெளியிடவுள்ள ஒரு ஸ்மார்ட்போனுடன், ஒரு லேப்டாப் ஒன்றையும் வெளியிடப்போவதாக கூறப்படுகிறது. 

தொழில்நுட்ப வல்லுநர் சுதான்சூ ஆம்போர், இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியபொழுது, ரெட்மீ நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனுக்கான அறிவிப்பின்போது, அதனுடன் சேர்ந்து, ஒரு புதிய லேப்டாப்பிற்கான அறிவிப்பையும் அறிவிக்கலாம்.

ஒருவேளை இந்த தகவல் உறுதியானது என்றால், அந்த லேப்டாப்பை ரெட்மீ என்ற பெயரில் அறிவிக்கும். ஹவாய் நிறுவனம் எப்படி அதன் துணை நிறுவனமான ஹானர் நிறுவனத்தின் பெயரில் லேப்டாப்களை வெளியிட்டதோ, சியோமி நிறுவனமும், அதே முறையை பின்பற்றவுள்ளதாக தெரிகிறது.

தன் துணை நிறுவனமான, ரெட்மீயின் பெயர்களை வெளியிடப்போகிறது. ஹானர் நிறுவனம் மேஜிக்புக் என்ற பெயரிலும், ஹவாய் நிறுவனம் மேட்புக் என்ற பெயரிலும் தன்னுடைய நிறுவனத்தின் லேப்டாப்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் கணிப்பு சரியாக இருந்தால் சில சிறந்த அம்சங்களுடன், குறைந்த விலையில் தன் லேப்டாப்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப் சியோமியால் வெளியிடப்படும் எம் ஐ நோட்புக் லேப்டாப்களை விட விலை குறைவாக இருக்கும்.

முன்னதாக இந்த நிறுவனத்தால் வெளியிடவுள்ள ஸ்மார்ட்போன் பற்றி பொது மேலாளர் லூ வெய்பிங் வெளியிட்டிருந்த ஒரு டீசரில், இந்த போன் திரையிலேயே ஃப்ங்கர்பிரிண்ட் மற்றும் 2 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி என்ற தகவல்களை வெளியிட்டிருந்தார்.

மேலும், முன்னதாக வெளியான தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.39-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை கொண்டு வெளியாகும். மொத்தமாக மூன்று பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மேகாபிக்சல் கேமராவும், 8 மேகாபிக்சல் மற்றும் 13 மேகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்கள் இருக்கும். மேலும் முன்புறத்தில் 30 மேகாபிக்சல் அளவு கொண்ட செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.

அதுமட்டுமின்றி,ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பை ரெட்மீ நிறுவனம் மே 13ஆம் தேதி அறிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Laptop, Redmi, Redmi Flagship
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  2. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  3. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  4. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  5. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  6. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  7. சாம்சங் கேலக்ஸி S27 மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கேமரா அப்கிரேடுகள் இருக்காது: அறிக்கை
  8. இந்தியாவில் ஹைசென்ஸ் E8S மினி-LED டிவி சீரிஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இன்ஸ்டாகிராமில் ஸ்பேம் மற்றும் பாட் ஃபாலோயர்களை எவ்வாறு நீக்குவது: ஒரு முழுமையான வழிகாட்டி
  10. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.