எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் (2019) மடிக்கணினி சீனாவில் இன்று வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட இந்த தயாரிப்பு 8வது தலைமுறை இன்டல் கோர் ஐ5 அல்லது கோர் எம் 3 பிராசஸ்சரை கொண்டுள்ளது.
அதுபோல் 4ஜிபி மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டியை இந்த மடிக்கணினி பெற்றுள்ளது. மேலும் 1.07 கிலோ மட்டுமே எடையுள்ள இந்த எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் (2019) உலக முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் (2019):
சியோமி நிறுவனம் சார்பில் வெளியான தகவலின் படி எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் (2019) தயாரிப்பு வரும் மார்ச் 28 ஆம் தேதி சீனாவில் வெளியாகவுள்ளது. இந்த எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் (2019) மடிக்கணினிகள் கோல்டு மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் வெளியாகுகிறது.
எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் (2019) இன்டெல் கோர் எம்3 சிபியு மற்றும் 1282013028 SSD தயாரிப்பு ரூ.38,400 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் (2019) Intel Core m3 CPU மற்றும் 256GB SSD கொண்ட தயாரிப்பு ரூ.42,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் (2019) Intel Core i5 CPU மற்றும் 256GB SSD கொண்ட தயாரிப்பு ரூ.45,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த தயாரிப்புகள் சீனாவுக்கு வெளியே விற்பனை செய்யப்படுமா என்பதை குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் (2019) சிறப்பு அம்சங்கள்:
சியோமி தனது மேம்படுத்தப்பட்ட எம்ஐ நோட்புக் ஏர் மாடலை லோகோ டிசையின் இல்லாமல் அறிமுகம் செய்துள்ளது. இந்த தயாரிப்பின் பெயரில் இருப்பதுபோல 12.5 இஞ்ச் திரையை இந்த மடிக்கணினி கொண்டுள்ளது.
இப்படி பல முன்னணி வசதிகள் கொண்ட இந்த எம்ஐ நோட்புக் ஏர் 1.07 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நோட்புக்கை 50 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்துவிடலாம். மேலும் டிடீஎஸ் சவுண்ட் சப்போர்ட் கூடிய வசதியை இந்த மடிக்கணினியில் சியோமி நிறுவனம் பொருத்தியுள்ளது.
4ஜிபி ரேம், யுஎஸ்பி -டைப் சி போர்ட், ஹெச்டிஎம்ஐ போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் புல்-லிட் விசைப்பலகையை கொண்டுள்ளது.மேலும் எம்ஐ நோட்புக் ஏர் வின்டோஸ் 10 ஹோம் எடிஷன் தயாரிப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்