ஆப்பிள் நிறுவனம் அதனுடைய மேக்புக் ப்ரோ 13-இன்ச் மற்றும் 15-இன்ச் டச் பார் மாடல்களில் புதிய அப்டேட்கள் செய்துள்ளது. இந்த புதிய மாடல்களில் 6 கோர் வேகமான ப்ராசஸர், 32 ஜீ.பி வரை ரேம், 4 டீபி வரை எஸ்.எஸ்.டீ, புதிய டிஸ்ப்ளே மற்றும் T2 செக்யூரிட்டி சிப் ஆகிய வசதிகளுடன் வந்துள்ளது. அமெரிக்காவில் புதிய மேக்புக் ப்ரோ மாடல் வியாழக்கிழமை முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் 13 இன்ச் மாடலின் விலை $1,799ல் தொடங்குகிறது, 15 இன்ச் மாடலின் விலை $2,399ல் தொடங்குகிறது. இந்தியாவில் 13 மற்றும் 15 இன்ச் மாடலின் விலைகள் முறையே ரூ. 1,49,000 மற்றும் ரூ. 1,99,000 என இருக்கிறது. இரண்டு மாடல்களுமே அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள், சத்தமில்லாத பயன்பாட்டுக்காக மேம்படுத்தப்பட்ட கீபோர்ட் வசதியுடன் வரவிருக்கிறது. மேலும் முந்தைய பட்டர்ஃப்ளை சுவிட்ச் டிசைன் மாடலில் உள்ள சிக்கல்களையும் தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதை ஆப்பிள் வெளிப்படையாக அதனுடைய அறிவிப்பில் குறிப்பிடவில்லை.
"புதிய மேக்புக் ப்ரோ தான் நாங்கள் தயாரித்ததிலேயே மிக வேகமான மற்றும் ஆற்றல் வாய்ந்தது. தற்போது 6 கோர் ப்ராசஸர், 32 ஜீபி சிஸ்டம் மெமரி, 4 டீபி அதிவேக எஸ்எஸ்டீ ஸ்டோரேஜ், ரெட்டினா டிஸ்ப்ளேயில் புதிய ட்ரு டோன் தொழில்நுட்பம், டச் பார், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக ஆப்பிள் டீ2 சிப், மற்றும் புதிய கீபோர்டு நீண்ட பேட்டரி பேக்அப் உடன் ப்ரோ பயனர்களுக்கு இது சிறந்த நோட்புக் மாடல்" என ஆப்பிள் நிறுவன மார்க்கெட்டிங் பிரிவின் துணை தலைவர் பில்லிப் ஷில்லர் தெரிவித்துள்ளார்.
புதிய 15 இன்ச் மேக்புக் ப்ரோ 8-ம் ஜெனெரேஷன் 6 கோர் இன்டெல் கோர் ஐ7 மற்றும் ஜோர் ஐ9 ப்ராசஸர்களை (2.9 ஜிகா ஹெர்ட்ஸ் வரை மற்றும் 4.8 ஜிகா ஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட் உடன்) கொண்டு 70% வேகமான செயல்பாட்டை அளிக்கிறது. புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ 8-ம் ஜெனெரேஷன் 6 கோர் இன்டெல் கோர் ஐ5 மற்றும் ஜோர் ஐ7 ப்ராசஸரகளை (2.7 ஜிகா ஹெர்ட்ஸ் வரை மற்றும் 4.5 ஜிகா ஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட் உடன்) கொண்டு அதன் முந்தைய மாடல்களுடன் இரண்டு மடங்கு வேகமான செயல்பாட்டை அளிக்கிறது. இந்த புதிய 15இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் 32 ஜீபி வரை ரேம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளும் வசதியை பெறுகிறது மற்றும் 4ஜீபி ராடியோன் ப்ரோ க்ராபிக்ஸ் கார்ட் வசதியுடன் 4 ஜீபி வீடியோ ரேம் வசதி உள்ளது. மற்றொரு புறம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ, இன்டெல் கிராபிக்ஸ் 655 மற்றும் 128 எம்.பி ரேம் உடன் வருகிறது. ஸ்டோரேஜைப் பொறுத்தவரை 15 மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் 4 டீபி, 2 டீபி எஸ்எஸ்டீ ஸ்டோரேஜ் வசதியுடன் வருகின்றன. இரண்டு மாடல்களும் இந்திய தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
புதிய மேக்புக் ப்ரோவில் ரெட்டினா டிஸ்பிளே உடன் வரும் ட்ரு டோன் தொழில்நுட்பம் 500 நிட்ஸ் பிரகாசம் மற்றும் பி3 வைட் கலர் கமுட் ஆகிய வசதிகளை வழங்குகிறது. தனியாக குபர்டினோ ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப் வழங்குகிறது. இது முதலில் ஐ-மேக் ப்ரோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது செக்யூர் பூட் மற்றும் என்கிரிப்டேட் ஸ்டோரேஜ் ஆகிய வசதியுடன் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் பாதுகாப்பை வழங்குகிறது. மற்றும் சிரி எனும் தொழில்நுட்பத்தையும் முதல் முதலாக மேக்கிற்கு கொண்டு வருகிறது.
ஆப்பிள், புதிய மேக்புக் ப்ரோ மாடல்களுக்கு பிரவுன், மிட்நயிட் நீலம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் லெதர் ஸ்லீவ்களை அறிமுகம் செய்கிறது. லெதர் ஸ்லீவ்கள் அதிக தரம் வாய்ந்த லெதர் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், கூடுதல் பாதுகாப்பிற்காக மெல்லிய மைக்ரோ ஃபைபர் லைனிங் இருப்பதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இந்த புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் நிறுவனத்தின் பேக் டு ஸ்கூல் ப்ரோமோஷனின் ஒரு பகுதியென ஆப்பிள் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று அமெரிக்காவில் தொடங்கி இந்த புதிய மாடல்கள் ஆப்பிள் எஜுகேஷன் ஸ்டோர் மூலம் கல்லூரி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் கூறுகையில், இந்த ப்ரோமோஷனில் கல்லூரி மற்றும் கல்வி தேவைகளுக்காக வாங்கும் மேக், ஐபாட் ப்ரோ, ஆப்பிள் கேர் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட பொருட்களுடன் ஒரு ஜோடி பீட்ஸ் ஹெடிபோன்களையும் உள்ளடக்கும் என தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாடல்களின் இந்திய விலைகள் பின்வருமாறு. புதிய 15 இன்ச் மேக்புக் ப்ரோ டச் பார், 2.2 ஜிகா ஹெர்ட்ஸ் 6 கோர் 8வது ஜெனெரேஷன் இன்டெல் கோர் ஐ7 ப்ராசஸர், ராடியோன் ப்ரோ 550எக்ஸ் கிராஃபிக்ஸ், 16ஜீபி ரேம், 256 ஜீபி எஸ்எஸ்டீ வசதிகளுடன் சில்வர் அல்லது ஸ்பெஸ் க்ரே நிறத்தில் ரூ. 1,99,900 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாடல் 2.6 ஜிகா ஹெர்ட்ஸ் 6 கோர் 8வது ஜெனெரேஷன் இன்டெல் கோர் ஐ7 ப்ராசஸர், ராடியோன் ப்ரோ 550எக்ஸ் கிராபிக்ஸ், 16 ஜீபி ரேம், 512 ஜீபி எஸ்எஸ்டீ ஸ்பெஸ் க்ரே அல்லது சில்வர் நிறத்தில் ரூ, 2,31,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
13 இன்ச் மேக்புக் ப்ரோ டச் பார், 2.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் 8வது ஜெனெரேஷன் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர், 8ஜீபி ரேம், 256 ஜீபி எஸ்எஸ்டீ வசதிகளுடன் சில்வர் அல்லது ஸ்பெஸ் க்ரே நிறத்தில் ரூ. 1,49,900 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாடல் 2.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் 8வது ஜெனெரேஷன் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர், 8 ஜீபி ரேம், 512 ஜீபி எஸ்எஸ்டீ ஸ்பெஸ் க்ரே அல்லது சில்வர் நிறத்தில் ரூ, 1,65,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
13 இன்ச் மேக்புக் ப்ரோவுக்கான கருப்பு, மிட்நைட் நீலம் மற்றும் பிரவுன் நிற லெதர் ஸ்லீவ்கள் ரூ. 16,900 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நிறுத்தில் 15 இன்ச் மேக்புக் ப்ரோவுக்கான லெதர் ஸ்லீவ்களின் விலை ரூ. 18,900.12 இன்ச் மேக்புக் ப்ரோவுக்கும் இதே நிறத்திலான லெதர் ஸ்லீவ்கள் ரூ. 13,900 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்