ளிப்கார்ட் தன்னுடைய ஆன்லைன் சந்தையில் வாடிக்கையாளர்களை கட்டுக்குள் வைக்க புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பிளிப்கார்ட் பிளஸ் என்று பெயரிட்பட்டுள்ளது. இதில் இணையும் நபர்களுக்கு ஏராளமான நன்மைகளைக் கொடுக்கிறது. இந்த வருடம் பிளிப்கார்ட் பிளஸில் இணைவதன் மூலம் ‘பிக் பில்லியன் டே’யில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இது மிகப்பெரிய சலுகையாக கருதப்படுகிறது.
பிளிப்கார்ட் பிளஸ் 3 கோடி பொருட்களுக்கு ப்ரீ ஷாப்பிங் அறிமுகப்படுத்தப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு வாடிக்கையாளரின் இருப்பிடம் தடையாக இருக்காது. பிளஸ் உறுப்பினர்களுக்கு பிளப்கார்ட்டின் விளம்பர விற்பனையில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பிளிஸ் உறுப்பினர்களுக்காக முன்னுரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் பிளிப்கார்ட்டில் பொருட்களை வாங்கும்போது வெகுமதியாக காயின் வழங்கப்படும்.
பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர்கள் புக் மை ஷோ, கானா, சோமட்டோ, மேக் மை ட்ரிப் போன்ற வலைதளங்கள் மற்றும் ஆப்களில் இருந்து கொடுக்கப்படும். இந்த ஸ்பெஷல் ஆஃபர்கள் கூப்பன்களாக கிடைக்கும். இதனை பிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்குவதன் மூலம் பெற முடியும். பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினராக இருந்தால், சேகரித்த காயின்களைக் கொண்டு மூன்றாம் நபரான வலைதளம் மற்றும் ஆப்கள் அளிக்கும் சலுகைகள் பெற்றுவிடலாம்.
பிளிப்கார்ட்டில் உறுப்பினராக சேர்வது முற்றிலும் இலவசமானது. ஆனால், பிளிப்கார்ட்டில் பொருட்களை வாங்கி காயின்களை சேகரிக்க வேண்டும். பிளிப்கார்ட் பிளஸ்ஸில் இப்போது வருடாந்திர அல்லது மாத சந்தா எதுவும் இருப்பதாக கூறவில்லை.
பிளிப்கார்ட்டில் உறுப்பினராக இணைவதற்கு பிளிப்கார்ட்டில் பொருட்களை வாங்கி 50 காயின்களை சேகரிக்க வேண்டும். ரூ.250க்கு 1 காயின் என்ற கணக்கில் மதிப்பிடப்படுகிறது. ரூ.12,500க்கு பொருட்களை வாங்கியதும் 50 காயின்களைப் பெற்று பிளிப்கார்ட் பிளஸில் இணைந்துவிட முடியும். ஒரு வேளை பிளிப்கார்ட்டின் பழைய உறுப்பினராக இருந்தால் புதிய காயின்களை சேகரிக்க வேண்டிய அவசியமில்லை.
பிளிப்கார்ட் வலைதளம் மற்றும் மொபைல் ஆப்பில் பிளிப்கார்ட் பிளஸ் பக்கத்தில் நுழைவதன் மூலம் பிளிப்காரட் பிளஸின் உறுப்பினர்களுக்கு தகுதியனவரா என்பதை அறிய முடியும். போதுமான காயின்களை கொண்டிருந்தால் ‘ஜாயின் ஃபார் ப்ரீ’ என்ற பட்டனை அழுத்தியதும் உடனே உறுப்பினராகி விடலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்