ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கு பதிலாக, முழு திரைப்படத்தை யூ-ட்யூபில் வெளியிட்டது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். சில மணி நேரங்களுக்குப் பின்னர் அது யூ-ட்யூபில் இருந்து நீக்கப்பட்டது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி அன்று, ‘காலி-தி கில்லர்’ என்ற ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் வெளியாவதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சோனி, டிரெய்லரை வெளியிடுவதற்கு பதில் தவறுதலாக, முழு திரைப்படத்தையும் யூ-ட்யூபில் வெளியிட்டது.
Hahahahahah Sony tried to put up a new trailer for "Khali The Killer" but accidentally uploaded the entire movie hahahahahahahaha im watchin it pic.twitter.com/IA2mOfElIQ
- Rocco Botte (@rocco_botte) July 3, 2018
Khali The Killer was a good movie thanks Sony
- hippy (@HoustonedHippy) July 3, 2018
Sony Execs - "We haven't had a controversy in so long!!"
- Riley Bursh (@Riley_Bursh) July 3, 2018
Khali the Killer Marketing Team - "Hold my beer."
**promptly uploads the full movie instead of the trailer**
89 நிமிடங்கள் கொண்ட அந்த முழு திரைப்படம் 8 மணி நேரத்திற்கும் மேல் யூ-ட்யூபில் இருந்தது. அப்போது இந்தத் திரைப்படத்தை, பலர் கண்டுள்ளனர். பிறகு இந்தப் படம் இணையத்தில் இருந்து நீக்கப் பட்டது. இந்த விவகாரம் ட்விட்டரில் வைரலானது. சோனி நிறுவனத்தை கேலி செய்து ட்விட்டரில் பதிவுகள் பறந்தன.
ஜான் மாத்யூஸ் இயக்கத்தில், ரிச்சர்டு காப்ரல் நடிக்கும் ‘காலி-தி கில்லர்’ திரைப்படம், கடந்த நவம்பர் மாதம் டி.வி.டி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்