முதல் முறையாக ஆசியாவில் 'டெமோ டே' நடத்தப் போகும் கூகுள்!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 1 ஜூன் 2018 00:03 IST
ஹைலைட்ஸ்
  • இதுவரை ஐரோப்பா, அமெரிக்காவில் மட்டுமே டெமோ டே நடத்தப்பட்டு உள்ளது
  • 2014-ம் ஆண்டு முதல் டெமோ டே நடத்தப்பட்டு வருகிறது
  • இந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி டெமோ டே நடத்தப்படும்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே இதுவரை `டெமோ டே'-வை நடத்தி வந்த கூகுள் நிறுவனம் முதன்முறையாக, ஆசியாவில் கால் பதிக்கப் போகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி, சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் இந்த `டெமோ டே' நத்தப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை கடந்த திங்கள் கிழமை கூகுள் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கூகுள் இந்த `டெமோ டே'-வை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் முதலீடு செய்ய தகுதி கொண்ட ஸ்டார்ட்-அப்ஸ்-களை கூகுள் கண்டறியும். மேலும், உலக அளவில் ஸ்டார்ட்-அப்ஸ்-களை விரிவாக்கம் செய்யவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் முடியும். 

இது குறித்து கூகுள் நிறுவனம், `எங்கள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்த வருடத்தின் ஆரம்பித்தில் சொன்னது போல, இது தான் ஆசிய கண்டத்தில் நாங்கள் முதன் முதலாக ஒருங்கிணைக்கும் `டெமோ டே'. இதன் மூலம், இந்தப் பகுதியில் இருக்கும் புத்தம் புது ஐடியாக்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம்' என்று கூறினார்.

மேலும், `இந்த டெமோ டே-வின் மூலம் ஆசிய கண்டத்தில் ஸ்டார்ட்-அப்ஸ், சர்வதேச அளவில் அவர்களின் கண்டுபிடிப்பை எடுத்துச் செல்ல முடியும். மேலும், உலகளாவிய முதலீட்டாளர்களையும் கவர முடியும்' என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த டெமோ டே-வில் பங்கேற்க, ஒரு ஸ்டார்ட்-அப் சட்டபூர்வமாக பதிய செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆசியாவில் அதன் தலைமையிடம் கட்டாயம் இருக்க வேண்டும். இதுவரை 34 லட்சம் வருவாய் ஈட்டியிருக்க வேண்டும். ஜூலை 1 ஆம் தேதியே இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apps, Internet, Google, Demo Days
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விவோ S2 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்: விளம்பர போஸ்டர் கசிந்தது
  2. டெல் ஏலியன்வேர் 16X அரோரா, 16 & 18 ஏரியா-51 இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
  3. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  4. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  5. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
  6. ஷியோமி பவர் பேங்க் 5i 20000mAh இந்திய அறிமுக தேதி உறுதி; முக்கிய அம்சங்கள், விவரங்கள் வெளியீடு!
  7. 9-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டத்துடன் மோட்டோ பேட் 70 குரூவ் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
  8. சாம்சங் 'பேக் டூ ஸ்கூல்' விற்பனை: கேலக்ஸி S26, டேப் S11 அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
  9. கூகுளின் ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக அமேசான் இந்தியாவில் கண்டறியப்பட்டது
  10. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுக தேதி கசிந்தது; முக்கிய அம்சங்களை டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.