அமேசானின் அதிரடி ஐபோன் ஆஃபர்!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 8 டிசம்பர் 2018 21:31 IST
ஹைலைட்ஸ்
  • அமேசானின் ஆப்பிள் ஃபெஸ்ட் சேல் டிசம்பர் 8 முதல் டிசம் 14 வரை உள்ளது
  • இந்த அமேசான் சேலில் 2018 மேக்புக் ஏரும் அடங்கும்.
  • குறிப்பிட்ட ஐபோன் மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி மற்றும் ஒரு சில ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ-யை அமேசான் வழங்குகிறது.

அமேசானின் வீக் ஒன்லி ஆப்பிள் ஃபெஸ்ட் சேல் தொடங்கியது. இதில் பல ஆப்பிள் தயாரிப்புகளுக்கு பிரத்தியோகமான ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. இந்த சேல் அடுத்த சனிக்கிழமை வரை நடைபெறும். இந்த 7 நாள் அமேசான் சேலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் பிற சாதனங்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன.

அமேசான் ஆப்பிள் சேல் ஆஃபர்

நோ-காஸ்ட் இஎம்ஐ-யில் ஐபோன்களுக்கு 16,000 வரை தள்ளுபடி வழங்குவதாக அமேசான் தெரிவித்துள்ளது. ஐபோன் எக்ஸ்-ஆனது ரூ. 74,999 (MRP ரூ. 79,999). ஐபோன் 6எஸ் ரூ. 24,999(MRP ரூ.29,900) மற்றும் ஐபோன் 6 ரூ. 21,999 (MRP ரூ. 23,750). இந்த இரு போன்களும் நோ-காஸ்ட் இஎம்ஐ-யில் பெற முடியும்.

இதைதவிர, ஐபோன், எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ் மற்றும் பிற ஐபோன் மாடல்களும் நோ-காஸ்ட் இஎம்ஐ-யில் கிடைக்கிறது.

சமீபத்தில் அறிமுகமான மேக்புக் ஏர்(2018) விலை ரூ.1,05,900 (MRP ரூ.1,14,900) ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் மேக்புக் ஏரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதுவே முதல்முறை. மேக்புக் ஏர் 2017 வேரியண்ட்டின் விலை ரூ.57,990 (MRP ரூ.62,990) எக்ஸ்சேன்ஜ் ஆஃபருடன் நோ-காஸ்ட் இஎம்ஐ-யும் வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஃபெஸ்ட் சேலில் 6-த் ஜெனரேஷன் ஆப்பிள் ஐபேட் 9.7 இன்ச் Wi-Fi-ன் விலை ரூ.23,999 (MRP ரூ.28,000) ஆக குறைந்துள்ளது.

எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களை பயன்படுத்தி ரூ.9,960 வரை கூடுதல் தள்ளுபடியினை பெறலாம். பீட்ஸ் இபி (ML992ZM/A) இயர்போன்களுக்கும் தற்போது தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளாக் மற்றும் புளூ நிற வேரியண்ட்களின் விலை ரூ.5,799 (MRP.ரூ.8,000) ஆக குறைந்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon India, Amazon Apple Fest, Apple
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. X பிரீமியம் vs இலவசம்: 2026-ல் இந்தியாவில் X பிரீமியம் வாங்குவது மதிப்புள்ளதா?
  2. இந்தியாவில் உங்கள் இன்ஸ்டாகிராம் பயோவில் பல இணைப்புகளைச் சேர்ப்பது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  3. ஒவ்வொரு இந்தியப் பயனரும் உடனடியாக இயக்க வேண்டிய முதல் 5 வாட்ஸ்அப் தனியுரிமை அமைப்புகள்
  4. இந்தியாவில் ரூ. 20,000-க்ககுள் 120Hz டிஸ்ப்ளே கொண்ட சிறந்த போன்கள்: iQOO Z11 Lite, Moto G37 Power, மேலும் பல
  5. ஐபோன், ஐபேட், மேக், வாட்ச் குத்தகை வசதிகளுடன் கூடிய ஆப்பிள் அப்கிரேட் திட்டம் ஜூலை 28-ல் தொடங்குவதாக தகவல்
  6. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  7. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  8. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  9. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  10. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.