ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடும் அமேசான்: வாடிக்கையாளர்களுக்கு கேஷ்-பேக் ஆஃபர்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 6 ஜூன் 2018 17:51 IST
ஹைலைட்ஸ்
  • அமேசான் தனது ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது
  • வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு
  • 1000 ரூபாய்க்கு மேல் ஷாப்பிங் செய்தால் 250 ரூபாய் கேஷ்பேக்

அமேசான் இந்தியா நிறுவனம் தனது ஐந்தாம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இதற்காக வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையாக கேஷ்-பேக் ஆஃபர் அளிப்பதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அமேசான் வலைப்பக்கத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் 1000 ரூபாய்க்கு மேல் ஷாப்பிங் செய்தால் 250 ரூபாய் கேஷ் பேக் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஃபர் அறிவிப்பு குறித்தான அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் பக்கத்தில் அதனது தலைவர் சிஇஓ ஜெஃப் பீசோஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன், சியாட்டில் நகரத்தில் தலைமை இடங்களைக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது ஆன்லைன் விற்பனையைத் தொடங்கியது. அதன் பின்னர் அமேசான் ப்ரைம் என்னும் சேவை, அமேசான் ப்ரைம் வீடியோ, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் அமேசான் மியூசிக் ஆகிய பல அறிமுகங்களை இந்தியாவுக்கு அளித்தது.

இன்று இந்நிறுவனத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆன்லைனில் 1000 ரூபாக்கு ஷாப்பிங் செய்து ஆன்லைன் மூலமே பணம் செலுத்துவோருக்கு 250 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்லைனில் பொருள் ஆர்டர் செய்ததில் இருந்து மூன்று நாள்களுக்குள் பணம் திரும்ப வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஇஓ பீசோஸ் வெளியிட்டுள்ள கடிதத்தில், “இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் அமேசான் இந்ந்தியா நிறுவனத்துக்கு சிறந்த வரவேற்பும் ஆதரவும் அளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon India, Amazon, Jeff Bezos
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.