70-இன்ச் 4K HDR திரை, அறிமுகமானது முதல் Redmi TV!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 29 ஆகஸ்ட் 2019 17:03 IST
ஹைலைட்ஸ்
  • 70-இன்ச் Redmi TV சீனாவில் செப்டம்பர் 3ல் விற்பனை
  • சர்வதேச அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை
  • Mi TV வரிசையில் 22 ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகமாகியுள்ளது

Dolby Audio மற்றும் DTS HD போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த Redmi TV கொண்டுள்ளது.

வெளியானது Redmi TV. வியாழக்கிழமை சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில், சியோமி நிறுவனம் முதல் ரெட்மி டிவியை அறிமுகப்படுத்தியது. சியோமி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி தொலைக்காட்சி, 'Redmi TV 70-inch' என்றே பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிவி 4K தரம், HDR  வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது. ரெட்மி டிவி மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட RedmiBook 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Redmi TV 70-inch: விலை!

சீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டிவி செப்டம்பர் 3ல் விற்பனைக்கு வரும் என சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிவி 3,799 யுவான்கள் (சுமார் 38,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. தற்போது சினாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த டிவி, சர்வதேச அளவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், சியோமி நிறுவனம் Mi TV போன்ற சாதனங்களில் இந்தியா பொன்ற நாடுகளில் விரைவாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்த முதல் ரெட்மி டிவியின் சீனாவை தாண்டிய அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Redmi TV 70-inch: சிறப்பம்சங்கள்!

முன்பு கூறியதுபோல, ரெட்மி டிவி 70-இன்ச் 4K திரை, HDR வசதி ஆகியவற்றுடன் சுவற்றில் மாட்டுவது அல்லது டேபிள் மீது வைப்பது என இரண்டு வசதிகளுக்கு ஏதுவான பேசல்களுடனே அறிமுகமாகியுள்ளது. இந்த ரெட்மி டிவி சியோமியின் பேட்ச்வால் தளத்தை கொண்டே இயங்குகிறது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பை கொண்ட இந்த ரெட்மி டிவி குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் SoC (64-bit Amlogic SoC) ப்ராசஸரை கொண்டே இயங்குகிறது. Dolby Audio மற்றும் DTS HD போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த ரெட்மி டிவி கொண்டுள்ளது.

இணைப்பு வசதிகளை பொருத்தவரை வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு USB போர்ட்கள், மூன்று HDMI போர்ட்கள், AV input, என பல வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டையும் அளிக்கிறது சியோமி நிறுவனம்.

முன்னதாக, சியோமி நிறுவனம் Mi TV வரிசையில் 22 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi TV 70 inch, Redmi TV, Xiaomi, Redmi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. HP ProBook 4 G2a விமர்சனம்: அலுவலகப் பணிக்கான நம்பகமான புதிய தோழன்
  2. சோனி ஆல்பா 7R VI ஃபுல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  3. ஆண்ட்ராய்டு 17: புதிய லாக் ஸ்கிரீன் பாதுகாப்பு வசதியுடன் பின் (PIN) எண்ணைத் தவறாக யூகிக்கும் ஆபத்து குறைப்பு!
  4. இந்தியாவில் LG-ன் புதிய Xboom Bounce, Grab ஸ்பீக்கர்கள் அறிமுகம்: 30 மணிநேர பேட்டரி மற்றும் AI அம்சங்களுடன்!
  5. இந்த அமேசான் பிரைம் டே-வில் சினிமா போன்ற அனுபவத்தைத் தரும் சிறந்த வயர்லெஸ் இயர்போன்கள் (TWS)
  6. ரூ.3,000-க்குள் சிறந்த ANC ஹெட்போன்கள்: அமேசான் பிரைம் டே விற்பனையில் வாங்க வேண்டிய டாப் சாய்ஸ்கள் இவை!
  7. சாம்சங் கேலக்ஸி M47 5G-ன் விலை மற்றும் சேமிப்பு விவரங்கள் இந்தியாவில் வெளியீடு
  8. வாட்ஸ்அப் பயனர்பெயர் அம்சம் குறித்து விளக்கம் கோரும் அரசு, மெட்டாவை வெளியீட்டை ஒத்திவைக்கக் கோருகிறது
  9. OnePlus N6 விமர்சனம்: பல ஆண்டுகளில் ஒன்பிளஸின் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட போன்
  10. Oppo Reno 16: சீன மாடலைப் போலன்றி, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்சேட்டுடன் அறிமுகம் உறுதி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.