இந்தியாவில் இன்று ரிலீஸாகும் எம்ஐ டிவி '4A ப்ரோ 32'!

விளம்பரம்
Tasneem Akolawala, மேம்படுத்தப்பட்டது: 7 மார்ச் 2019 11:45 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ரூ.12,999க்கு இந்த தொலைக்காட்சி விற்பனை செய்யப்படவுள்ளது.
  • எம்ஐ மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் விற்பனை!
  • இந்த தயாரிப்பு மதியம் 12 முதல் வெளியாகுகிறது.

இந்தத் தயாரிப்பு ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காமில் வெளியாகிறது.

இந்தியாவில் கடந்த வாரம் சியோமி நிறுவனம் தயாரிப்பில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், போன்களுக்கே அதிக முக்கியதுவம் கொடுக்காமல் சியோமி நிறுவனம், அதன் எம்ஐ டிவி 4A ப்ரோ 32 தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் புதிய தொலைக்காட்சி மாடல் ஃபிளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் கிளைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ப்ளுடூத்தால் பவரூட்டபட்ட ரிமோட் மற்றும் 7,00,000 நிகழ்சிகளுடன் இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி வெளியாக உள்ளது. இந்தத் தொலைக்காட்சியில் கூகுளின் 'வாய்ஸ் அஸிஸ்டென்ட்' வசதியும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

எம்ஐ டிவி 4A ப்ரோ 32 தொலைக்காட்சியின் விலை (இந்தியா):

இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எம்ஐ டிவி 4A ப்ரோ 32 தொலைக்காட்சி, ரூபாய் 12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதியம் 12 மணி முதல் பல ஆன்லைன் தளங்களில் இந்தத் தொலைக்காட்சி விற்பனைக்கு வெளியாகிறது.

ஏற்கெனவே இந்த பட்ஜெட் தொலைக்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் இந்தத் தயாரிப்பு வெளியாவதற்கு முன்னரே 'கார்டில்' தேர்வு செய்து வைத்துக்கொள்வது சுலபமாக வாங்க வழி வகுக்கும்.

எம்ஐ டிவி 4A ப்ரோ 32 தொலைக்காட்சி சிறப்பம்சங்கள்:

இந்தத் தயாரிப்பின் பெயரிலேயே 32 இஞ்ச் ஹெச்டி திரை இருக்கும் நிலையில் இந்த தொலைக்காட்சி 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகிறது. மேலும் 178 டிகிரி கோணம், பாட்ச்வால் யுஐ கொண்ட இந்தத் தொலைக்காட்சி 64 பிட் குவாட் கோர் அமலாஜிக் கோர்டெக்ஸ்-A53 பிராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது.

இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், 3 ஹெச்டி போர்ட்கள் மற்றும் பல முக்கிய அம்சங்களுடன் இந்தத் தயாரிப்பு இன்று வெளியாகிறது. இந்தத் தகவலுடன் 'ஸ்போர்ட்ஸ் ப்ளுடூத் இயர்போன்ஸ் பேசிக்' தயாரிப்பின் விலையாக ரூ.1,499யை அறிவித்துள்ளது எம்ஐ நிறுவனம். இந்த இயர்போன்ஸை எம்ஐ.காம் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  2. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  3. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  4. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  5. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  6. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  7. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  8. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  9. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  10. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.