PUBG Mobile Lite Update: முதலாமாண்டு கொண்டாட்டம் அப்டேட்

விளம்பரம்
Edited by Barath Raj, மேம்படுத்தப்பட்டது: 27 ஜூலை 2020 19:00 IST
ஹைலைட்ஸ்
  • புதிய மேப் பகுதிகள் உள்ளது
  • இரண்டு புதிய வெப்பன்கள் சேர்க்கப்பட்டுள்ளது
  • பப்ஜி மொபைல் லைட் 564MB அளவு ஆகும்

பப்ஜி லைட் வெர்ஷன் அப்டேட் 564 MB ஆகும்

பப்ஜி லைட் 0.18.0 அப்டேட் வந்துள்ளது. முதலாமாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷனில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும் லைட் வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக லக்கி டிரா தீம் கலக்கலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வடமேற்கு பகுதியில் உள்ள வரேங்க மேப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

புதிய வெப்பன்கள், புதிய அரேனா மேப், சிஸ்டம் அப்டேட்ஸ், டிஸ்பிளே மாற்றம் போன்ற பல அம்சங்கள் 0.18.0 வெர்ஷனில் அப்பேட் செய்யப்பட்டுள்ளது. 

கேமர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக பப்ஜி மொபைல் லைட்டை அப்டேட் செய்து, இலவசமாக விளையாடலாம். இருப்பினும் சில பயனர்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரிரு நாளில் இந்த பக் சரியாகும்.  

பப்ஜி லைட் என்பது குறைந்த அம்சம் கொண்ட மொபைல் வேரியன்டுகளுக்காகவே உருவாக்கப்பட்டது. எனவே, அதற்கு ஏற்றாற் போலவே புதிய அப்டேட்டுக்களும் வழங்கப்படுகிறது. 

முக்கிய அப்டேட்டுக்கள்:
பப்ஜி லைட்டின் முக்கிய அப்டேட்டே அதன் வரிங்க மேப்தான். சில புதிய இடங்கள், கிராபிக்ஸ்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. விளையாடும் போது இந்த அப்டேட்டுக்கள் அனைத்தும் புரிய வரும். தென்மலை பகுதியில் உள்ள சுரங்கப் பாதைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்லோ மூவில் கேபிள் கார்களும் மேம்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை கழுகுப் பார்வையில் பார்க்க முடியும்.


புதிய வெப்பன்கள்:
பப்ஜி 0.18.0 அப்டேட்டில் உள்ள புது வெப்பன்கள் P90 சப் மெஷின் துப்பாக்கி, MP5K சப் மெஷின் துப்பாக்கி ஆகும். இவற்றில் MP5K கிளாஸிக் மோடில் இருக்கும் போது, P90 துப்பாக்கி ஏரேனா கேம் மோடில் செயல்படும். கூடுதலாக M16 ரக ரைஃபில்லும் ஸ்டாக்கில் உள்ளது. 

பிற மாற்றங்கள்

மேலும், பப்ஜி வாகனங்கள், பாராசூட்கள், பிளேன் போன்றவை 3டி-யில் நன்றாக தெரியும் வகையில் அதன் கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

முதலாமாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பப்ஜியில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் கேமர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாகும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இதனை அப்டேட் செய்யலாம். இதன் மெமரி 564MB என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PUBG, PUBG Mobile Lite, PUBG Mobile Lite Update
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  2. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  3. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  4. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  5. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  6. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  7. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  8. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  9. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  10. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.